திடீரென கலர் மாறிய கால்.. பதறிப் போன மார்க்.. கடைசில அந்த வாட்ஸ் அப் ஜோக் நிஜமாகிடுச்சே!

வாட்ஸ் அப் ஜோக் ஒன்று அமெரிக்காவில் நிஜமாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவிய ஜோக் ஒன்று நிஜமாகவே அமெரிக்காவில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் மார்க். சம்பவத்தன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மார்க், உடை மாற்றும் போது தனது கால் நீல நிறமாக மாறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனக்கு ஏதோ மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினை இருப்பதாக பயந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.

sudden-toes-blue-instantly-the-individual-ran-to-the-hospital

அங்கு மருத்துவர்கள் அவரைத் தீவிர பரிசோதனை செய்தனர். ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை எனப் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால் அதில் எல்லாம் மார்க்கின் கால் ஏன் நீலநிறமாக மாறியது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் ஒரு வழியாக அதன் காரணம் மார்க்கிற்கே புரிந்தது. அதாவது அன்றைய தினம் மார்க் புதிய ஜீன்ஸ் ஒன்றை அணிந்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதன் சாயம் தான் அவரது காலில் ஒட்டியுள்ளது. உண்மை தெரிந்த பிறகு தான் மார்க்கிற்கு நிம்மதி கிடைத்தது. தனது இந்த அனுபவத்தை டிவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த டிவீட் சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடிவீட்டுக்களைப் பெற்று வைரலாகியுள்ளது. மார்க்கின் இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், அவர்களும் இதே போல் தங்களது வாழ்க்கையில் சந்தித்த வேடிக்கையான சம்பவங்களை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் அடிக்கடி இதே போல் ஒரு ஜோக் உலா வரும். அதில், நீல நிற லுங்கியின் சாயம் காலில் ஒட்டிக் கொள்ள, பயந்து போகும் அந்நபர் அடுத்தடுத்து இரண்டு கால்களையுமே வெட்டிக் கொள்வதாக இருக்கும். கடைசியில் அவரது கட்டைக் காலும் நீலநிறமாக மாற அப்போது தான் அவரது லுங்கி சாயம் போவதே அவருக்கு தெரிய வரும். தற்போது இதே போல் தான் மார்க்கின் நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நல்லவேளை அவர் தவறான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளாமல் தப்பித்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+