"விசா ரத்து.." இரவோடு இரவாக பல நூறு பேருக்கு மெயில் அனுப்பிய அமெரிக்கா.. அதிர்ச்சியில் இந்தியர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரம் காட்டி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே திடீரென அமெரிக்காவில் வசிக்கும் பல வெளிநாட்டினருக்கு அவர்களின் விசா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக மெயில் போய் இருக்கிறது. இதனால் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு குடிவரவு விதிகள் மொத்தமாக மாறிவிட்டது. வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குச் செல்லப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கூட H-1B விசா கோரி விண்ணப்பித்தோரின் விசா நேர்காணல்கள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.

விசா ரத்து
இது ஒரு பக்கம் இருக்க ஏற்கனவே H-1B மற்றும் H-4 வாங்கி அமெரிக்காவில் வசித்து வரும் பலருக்கும் திடீரென ஒரு மெயில் போய் இருக்கிறது. அமெரிக்கத் தூதரகங்கள் சார்பில் அந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அவர்களின் வேலை விசாக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
"prudentially revoked" என்று குறிப்பிட்டு மெயில் அனுப்பியுள்ளனர். அதேநேரம் முன்னெச்சரிக்கை விசா ரத்து என்பது ஒரு தாற்காலிக நடவடிக்கை தானாம்.. இது விசாவை நிரந்தரமாக மறுப்பதோ அல்லது ரத்து செய்வதோ அல்ல என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். விசா வைத்திருக்கும் நபர் குறித்து சந்தேகம் ஏற்படும்போது, பிரச்சனை முழுமையாக முடியவில்லை என்றால் பாதுகாப்புக்காக இதுபோல விசா எடுக்கப்படுகிறது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக அமெரிக்கக் குடிவரவு வழக்கறிஞர் எமிலி நியூமன் கூறுகையில், "H-1B மற்றும் H-4 விசா வைத்திருப்போருக்கு இதுபோல மெயில் வருவது அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசா ரத்துகள் எனச் சொல்லி மெயில் அனுப்புகிறார்கள். ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் விசாரணையில் இருந்தாலே அவர்களின் விசாவையும் ரத்து செய்கிறார்கள். இதனால் அமெரிக்காவில் இருப்போருக்கு உடனடியாகப் பாதிப்பு இல்லை. இருப்பினும், அடுத்த முறை விசா நீடிப்பிற்குச் செல்லும்போது சிக்கல்களை எதிர்கொள்வார்கள்.
அமெரிக்கா ஆக்ஷன்
அமெரிக்க அரசு சமீபத்தில் தான் H-1B விசா வைத்திருப்போர் அவர்களின் குடும்பத்தினரின் சமூக வலைத்தளப் பதிவுகளை ஆராய இருப்பதாக அறிவித்திருந்தது. அதாவது அவர்கள் சோஷியல் மீடியா போஸ்ட்களை கண்காணித்து, அதில் எதாவது டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக போஸ்ட் செய்தாலும் விசா ரத்து செய்யப்படுமாம். இந்த உத்தரவு வந்து சில நாட்களிலேயே இந்த விசா ரத்து மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் இந்த மசோதாவை எதிர்க்கும் அதேநேரம் மற்றொரு தரப்பினர் இதற்கு ஆதரவாகவும் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள், "பிரச்சனை வந்த பிறகு வருந்துவதை விட, பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. எனவே, இந்த நடவடிக்கை சரியானது தான். ஒரு மீது வழக்கு விசாரணையில் இருக்கும்போது சம்பந்தப்பட்டவர் அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைய விடாமல் தடுப்பதே அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்" என்கிறார்கள்.
என்ன நடக்கும்
அதாவது ஒருவருக்கு இப்படி prudentially revoked என்று மெயில் வருகிறது என்றால் அவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என அர்த்தம் இல்லை. ஆனாலும், அடுத்த முறை விசா நீட்டிப்பிற்குச் செல்லும் முன்பு பிரச்சினையை முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு விசா நீட்டிப்பு கிடைக்காது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறினால் அவர்கள் விசா காலாவதியாகவில்லை என்றாலும் கூட மீண்டும் அவர்களால் அமெரிக்காவில் நுழைய முடியாது.
-
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications