வேற லெவலில் மாறப்போகும் ட்விட்டர்.. டிவிட் மட்டும் இல்லை.. ஆடியோ-வீடியோ காலும் பேசலாம்..எலான் மஸ்க்
வாஷிங்டன்: பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் விரைவில் வாய்ஸ் கால், வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். போன் நம்பர் இன்றி இந்த சேவையை பெற முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு கையகப்படுத்தினார். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதோடு, பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு... ட்விட்டர் திவால் நிலைக்கு சென்று விடும் இதனால், வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். அதன்படி, ட்விட்டர் புளு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என சில பிரதேயக கணக்குகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த புளு டிக் வசதியை அனைவருக்கும் கொடுக்கப்போவதாக அறிவித்த எலான் மஸ்க். இதற்காக பணம் கட்டினால் போதும் என்ற வசதியை அறிமுகம் செய்தார். அதாவது, மாதம் 8 டாலர் செலுத்தினால் அனைவருக்கும் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது.
இந்த வசதியை பயன்படுத்தி பலரும் சந்தா கட்டணம் செலுத்தி ப்ளு டிக் வசதி வாங்கினர். அதேவேளையில் பிரபலங்கள் யாரும் இதற்கு அசைந்து கொடுக்கவில்லை. இதனால், சந்தா கட்டணம் செலுத்தாத பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் ப்ளு டிக் வசதியை ட்விட்டர் கடந்த மாதம் 20 ஆம் தேதி பறித்தது.

எங்கள் மூலம் ட்விட்டருக்கு வருமானம் கிடைக்கும் போது, நாங்கள் ஏன் ப்ளூ டிக்குகளுக்கு சந்தா செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பிய பிரபலங்கள், கட்டணம் செலுத்த மறுத்துவிட்டனர். அதன்பிறகு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்ட பிரபலங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் ப்ளு டிக் வசதியை கொடுத்தது. இவ்வாறாக ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க், தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதாவது ட்விட்டர் மூலமாக ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இதற்காக போன் நம்பர் எதுவும் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். அதேபோல், என்கிரிப்ட் வசதி கொண்ட மெசேஜ் சேவையும் வரப்போதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு ட்விட்டர் பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

எனினும் டிவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்குமா அல்லது ப்ளு ட்விட்டர் சப்ஸ்கிரைப்ஷன் செய்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா? என்ற விவரம் வெளியாகவில்லை. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இந்த வசதி இருக்கும் நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு போட்டியாக ட்விட்டரும் இந்த சேவையை அளிக்க முன்வந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications