அந்த பெண்தான் வந்து மேலே படுத்தார்.. அமெரிக்காவில் சிறை தண்டனை பெற்ற தமிழக ஐடி ஊழியர் மனைவி குமுறல்
வாஷிங்டன்: விமானத்தில் தூங்கிக்கொண்டிருந்த சக பெண் பயணிக்கு பாலியல் கொடுத்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஐடி ஊழியருக்கு அமெரிக்காவிலுள்ள நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நிலையில், குற்றச்சாட்டை அவரின் மனைவி மறுத்தார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரபு ராமமூர்த்தி (34) அமெரிக்காவின் டெட்ரியாட் நகரிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எச்-1பி விசா பெற்றவராகும்.

கடந்த ஜனவரி 3ம் தேதி லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ரியாட் நகருக்கு பிரபு ராமமூர்த்தி தனது மனைவியுடன் விமானத்தில் சென்றார். மனைவி ஒரு பக்கம் அமர்ந்திருந்த நிலையில், மற்றொரு பக்கம் இளம் பெண் அமர்ந்திருந்தார்.
Indian national jailed over sex assault on US flight https://t.co/PMonJMJtNu pic.twitter.com/9zFUNlDwQm
— Zoe Leoudaki (@Zoe_Leoudaki) December 14, 2018
இரவு பயணத்தின்போது பயணிகள் பெரும்பாலானோர் தூங்கிய நிலையில், பிரபு ராமமூர்த்தி தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு பாலியல் சில்மிஷம் கொடுத்துள்ளார். இதை உணர்ந்ததும், அந்த பெண் பதறி எழுந்தார். விமான ஊழியர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது, அந்த பெண்ணின் சட்டை பொத்தான்கள் கழற்றப்பட்டிருந்ததும், பேண்ட் ஜிப்பும் அவிழ்க்கப்பட்டிருந்தது.
பிரபு ராமமூர்த்தியின் கைகள், தனது பேண்ட்டுக்குள் இருந்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து, டெட்ரியாட்டில் விமானம் தரையிறங்கியவுடன் பிரபு ராமமூர்த்தி மீது பாதிக்கப்பட்ட பெண் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு டெட்ரியாட் நகரிலுள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், இன்று நீதிபதி டெர்ரன்ஸ் பெர்க் தண்டனை விவவரத்தை தெரிவித்தார். அதில் பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்குள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசு தரப்பு 11 வருட சிறை தண்டனை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தண்டனை காலம் முடிந்ததும், பிரபு ராமமூர்த்தி, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்தான், தனது கணவர் மீது சாய்ந்து படுத்ததாகவும், குறிப்பாக தொடை பகுதியில் படுத்து கிடந்ததாகவும் கூறுகிறார் அவர். இதனால், அந்த பெண்முக்கு வேறு பக்கம் சீட் கொடுக்குமாறு விமான ஊழியர்களை தாங்கள் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் பிரபு ராமமூர்த்தி மனைவி கூறி வருகிறர். ஆனால், விமான ஊழியர்களோ, அப்படி எதுவும் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணை சம்பவம் நடந்த பிறகு வேறு சீட்டில் அமர வைத்தோம் என்றும் கூறியுள்ளனர்.
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications