வெடித்து சிதறிய டெஸ்லா கார்.. அதுவும் டிரம்ப் ஹோட்டல் அருகில்.! அலறும் அமெரிக்கா! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள டிரம்ப் டவர் முன்பு திடீரென டெஸ்லா கார் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில் டிரவைர் கொல்லப்பட்ட நிலையில், ஏழு பேர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவுக்கு 2025 புத்தாண்டு மிக மோசமாகவே அமைந்துள்ளது. அங்கு நியூ ஆர்லியன்ஸில் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.

america tesla donald trump

டெஸ்லா கார்:

மக்கள் கூட்டத்திற்குள் அந்த நபர் வேண்டுமென்றை டிரக்கை ஓட்டி சென்றுள்ளார். இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அமெரிக்காவில் மற்றொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு லாஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் டவர் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட டெஸ்லா சைபர்ட்ரக் கார் திடீரென வெடித்துள்ளது. இதில் கார் டிரைவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

நியூ ஆர்லியன்ஸில் தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில் இந்தச் சம்பவமும் நடந்துள்ள நிலையில், இது தீவிரவாத செயலா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவின் எஃப்பிஐ தெரிவித்துள்ளது. இது பயங்கரவாத செயலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இரு சம்பவங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என எஃப்.பி.ஐ அமைப்பு ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

america tesla donald trump

பயங்கரவாத சம்பவமாக இருக்கலாம்:

உள்ளூர் நேரப்படி இந்தச் சம்பவம் காலை 8.40 மணிக்கு நடந்துள்ளது. அந்த சைபர் டிரக் டிரம்ப் வந்த நின்று சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளில் சைபர்டிரக் வெடித்துச் சிதறுவதும் தெளிவாகத் தெரிகிறது.

வாகனத்தின் பின்பகுதியில் பட்டாசுகள் மற்றும் கேம்ப் எரிபொருள் இருந்த நிலையில், அதன் காரணமாக கார் வெடித்துச் சிதறி இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த விபத்தில் கொல்லப்பட்ட டிரைவரின் அடையாளத்தை எஃப்.பி.ஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், விசாரணை நடந்து வருவதால் அவரது தகவல் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. மேலும், இதைத் தொடர்ந்து டிரம்ப் டவரில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்பு இருக்கலாம்:

இந்தச் சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு நியூ ஆர்லியன்ஸில் பகுதியில் மக்கள் கூட்டத்தில் டிரக்கை ஏற்றியும் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியிருந்தார். அந்த டிரக்கும் லாஸ் வேகாஸில் வெடித்துச் சிதறிய டெஸ்லா சைபர்டிரக் காரும் ஒரே நிறுவனத்தில் இருந்து வாடைக்கு எடுக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்..

எஃப்.பி.ஐ அமைப்பின் கூட்டுப் பயங்கரவாத டாஸ்க் ஃபோர்ஸ் விசாரணையை நடத்தி வருகிறார்கள். பொதுவாக சைபர்டிரக்கில் பாதுகாப்பு அம்சங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாகவே இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து, காரே தீப்பற்றி எரிந்த போதிலும், அருகே பெரியளவில் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+