நடந்தால் போதும்.. டெய்லி ரூ.28,000 சம்பளம்! அள்ளி தரும் எலான் மஸ்க்! ஆனா காரணத்தை கேட்டால் நடுங்குதே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா கார் நிறுவனம் இப்போது ரொம்பவே வினோதமான ஒரு வேலையை அறிவித்துள்ளது. நடந்தால் சம்பளமாம்.. ஆம் வெறும் நடந்தால் மட்டும் போதும் அதற்கே சம்பளம் தருகிறார்கள். அதுவும் தினசரி ரூ.28,000 வரை ஊதியமாகக் கிடைக்குமாம். இது குறித்து நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் முக்கியமானது மின்சார கார் நிறுவனமான டெஸ்லா.

offbeat elon musk

டெஸ்லா: உலகின் மிக முக்கிய மின்சார கார் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இந்த டெஸ்லா இப்போது வினோதமான ஒரு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதாவது தினசரி ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடக்க விரும்பும் நபர்களுக்கு இந்த வேலை பொருத்தமாக இருக்கும். ஆம், நடப்பது மட்டும் தான் வேலை. அதற்கு இவர்கள் பயங்கரமான சம்பளத்தையும் தூக்கித் தருகிறார்கள். எவ்வளவு எனக் கேட்கிறீர்களா.. ஒரு மணி நேரத்திற்கு $48 டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,000.

டெஸ்லா நிறுவனம் இப்போது மனித வடிவில் ஆப்டிமஸ் என்ற ரோபோவை உருவாக்கி வருகிறது. மோஷன்- கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரோபோவுக்கு தேவையான தகவல்களைக் கொடுத்து வருகிறார்கள். அதற்காகவே மக்களை நடக்கச் சொல்லி அந்த டேட்டாவை எடுக்கிறது டெஸ்லா. இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.28,000 வரை சம்பாதிக்கலாம்.

டெஸ்லா ரோபோ: டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் கடந்த 2021ஆம் ஆண்டில் தான் ஆப்டிமஸ் என்ற மனித வடிவிலான ரோபோவை அறிமுகப்படுத்தினார். இது தொழிற்சாலை வேலை முதல் வீடுகளைப் பராமரிப்பது வரை பல வேலைகளைச் செய்யும் திறனை பெற்று இருக்கும் என்று சொல்லப்பட்டது. இதற்கான தீவிர முயற்சியில் டெஸ்லா நிறுவனம் இறங்கி இருக்கிறது. இதற்காகக் கடந்த ஓராண்டாகவே மோஷன்- கேப்சர் சூட்கள் மூலம் டேட்டாவை சேகரித்து அதை இந்த ஆப்டிமஸை அளித்து பயிற்றுவித்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாகவே இப்போது நடப்பது குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த வேலையை அவர்கள் "டேட்டா கலெக்ஷன் ஆபரேட்டர்" என்று குறிப்பிடுகிறார்கள். இதில் நாம் மோஷன்-கேப்சர் சூட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணிந்து அவர்கள் சொல்லும் பாதையில் தினமும் ஏழு மணி நேரம் வரை நடக்க வேண்டும். மேலும், டேட்டாவை சரியாகப் பதிவு செய்வது, அந்த உபகரணங்களை ஆப்ரேட் செய்வது உள்ளிட்ட திறன்கள் கொஞ்சம் இதற்குத் தேவை.

காரணம் நடுங்க வைக்குதே: ஏற்கனவே ஏஐ எத்தனை வேலைகளை பறிக்குமா என்ற அச்சம் இருக்கும் நிலையில், இந்த ரோபோ எல்லா வேலையையும் காலி செய்துவிடுமோ என்ற அச்சம் நடுங்க வைப்பதாக இருக்கிறது.

கண்டிஷன்கள்: மேலும், இந்த வேலைக்கு அப்ளை செய்வோர் 5'7" மற்றும் 5'11" உயரம் இருக்க வேண்டுமாம். 30 பவுண்டுகள் அதாவது 13 கிலோ தூக்கி நடக்கும் அளவுக்கு வலிமையாக இருக்க வேண்டுமாம். மேலும், விஆர் உபகரணங்களை நீண்ட காலம் இயக்கும் திறனும் கொண்டிருக்க வேண்டுமாம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு மருத்துவச் செலவு ரொம்பவே அதிகம். இதனால் பலரும் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது அங்கே இன்சூரன்ஸ் தொகையும் அதிகமாக இருப்பதால் அதைக் கூட பலரால் செலுத்த முடிவதில்லை. இதனால் இந்த வேலைக்குச் சேர்வோருக்குச் சம்பளத்துடன் இன்சூரன்ஸையும் தருவோம் என்று அறிவித்துள்ளது டெஸ்லா. மேலும், எடை குறைப்பு உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்களுக்கும் கம்பெனியே ஸ்பான்சர் செய்யும் எனச் சொல்லி ஆள் எடுத்து வருகிறது டெஸ்லா.

ஷிப்ட்: அதேநேரம் நாம் விரும்பிய போது எல்லாம் வேலை செய்ய முடியாது. இதற்காகத் தனி ஷிப்ட்கள் இருக்கிறதாம். காலை 8:00 முதல் மாலை 4:30 வரை, மாலை 4:00 முதல் நள்ளிரவு 12:30 மணி வரை, இரவு 12:00 முதல் காலை 8:30 என்று 3 ஷிப்ட்கள் இருக்கிறதாம். இந்த சம்பளத்தில் இப்படி ஒரு வேலை இருந்தால் நீங்கள் சேர்வீர்களா என்ன!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+