என்றென்றும் என்னை புன்னகைக்க வைப்பவர்கள்... காதலர் தினத்தன்று க்யூட் போட்டோவை பகிர்ந்த ஒபாமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இன்று காதலர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, குடும்பத்தினருடன் இருக்கும் க்யூட்டான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகெங்கும் இன்று காதலர் தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று அனைவரும் தங்கள் காதலர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "என்னை எப்போதும் சிரிக்க வைக்கும் மூன்று பேருக்கும் காதலர் தின வாழ்த்துகள். உங்களின் ஒளி வாழ்க்கையில் அனைத்தையும் பிரகாசமாக்குகிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

The 3 Who Never Fail To Make Me Smile, Obama shares his Valentines Day Pic

அதேபோல அமெரிக்க அதிபர் பைடனும் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு மனைவி ஜில் பைடனுடன் வெள்ளை மாளிகையில் இணைந்து நடந்து செல்வது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ஒபாமா அதிபராக இருந்த போது, அவருடன் துணை அதிபராக இருந்தவர் தான் ஜோ பைடன். அதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது அமெரிக்காவின் 46ஆவது அதிபராக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+