ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்... அமெரிக்காவிலிருந்து பிரத்யேக நேரடி களநிலவரம்..!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவிக்கிறார் அமெரிக்க வாழ் தமிழரான சிவா.

வழக்கமாக மந்தமான நிலையில் காணப்படும் வாக்குச்சாவடி மையங்கள் இந்த முறை மிகுந்த பரபரப்புடன் காணப்படுவதாக கூறுகிறார் சிவா.

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக வாஷிங்டனில் இருந்து அவர் அனுப்பிய காணொலியில் கூறியிருப்பதாவது'

பிரத்யேக தகவல்

''அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மக்கள் அலை அலையாய் வாக்களிக்க வருகிறார்கள். நவம்பர் 3-ம் தேதி தான் தேர்தல் என்றாலும் கூட இப்போதே Early Voting முறையை பயன்படுத்தி தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நான் வாஷிங்டனில் உள்ள வாக்குசாவடி மையம் ஒன்றில் இருந்து இந்த தகவலை உங்களிடம் பகிர்கிறேன்''.

கள நிலவரம்

''நீண்ட வரிசையில் வரலாற்றில் இல்லாத வகையில் அமெரிக்க மக்கள் ஓட்டுப் போடுவதற்காக வருகிறார்கள். இதனால் இந்த தேர்தலை பொறுத்தவரை ஸ்பெஷல் தேர்தல் என்றே சொல்லலாம். ஜோ பிடனுக்கும் டிரம்புக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளது. டிரம்ப் அதிபராக வந்தது முதல் வெள்ளைக்கார ஆதிக்க போக்கு இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள்''.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

''குறிப்பாக அண்மையில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை வெள்ளைக்கார காவல் அதிகாரி ஒருவர் கழுத்தில் காலால் மிதித்த நிகழ்வை மக்கள் மறக்கவில்லை. புளோரிடா, பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் போன்ற மாநிலங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் ஜோ பிடன் அதிபராவதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன''.

பிடனுக்கு ஆதரவு?

''டிரம்பின் குடியேற்றக் கொள்கை காரணமாக பல நாடுகளில் இருந்தும் அமெரிக்கா வந்துள்ளவர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதை உணர முடிகிறது''. மேலும், வாஷிங்டனில் இருந்து ஒன் இந்தியா தமிழுக்கு அனுப்பப்பட்டுள்ள முழு வீடியோவை நமது யூ டியூப் பக்கத்தில் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+