3,000 கி.மீ தொலைவிற்கு பரவும் புகை.. வெளியாகும் நச்சு கார்பன்.. உலகையே உலுக்கும் அமேசான் காட்டுத் தீ
Recommended Video
வாஷிங்டன்: அமேசான் காட்டுத் தீ நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உலகம் முழுக்க சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிட்டது.
அமேசான் மழைக்காடுகளின் முக்கியத்துவம் குறித்து இதுவரை அறியாத மக்களுக்கும், இப்போது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த காட்டுத் தீ.
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ, அதிக அளவில் புகை மற்றும் கார்பனை வெளியேற்றுகிறது. தீயில் இருந்து வரும் புகைமூட்டங்கள் அமேசான் பிராந்தியத்தில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் பரவியுள்ளன.

3200 கிலோ மீட்டர் தூரம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை ஆய்வுப்படி, அமேசான் காட்டுத் தீ, புகை அட்லாண்டிக் கடற்கரை வரை பயணிக்கிறது. 3200 கிலோ மீட்டர் தூரத்தில், உள்ள சாவோ பாலோவில் வானம் இருளாக மாறக் காரணமாக அமைந்துள்ளது என்றால் நிலைமையை பார்த்துக் கொள்ளுங்கள்.

கார்பன் டை ஆக்ஸைடு
பிரேசிலின் பாரேவில் இது போன்ற சில காட்டுத்தீக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 228 மெகா டன்களுக்கு சமமான கார்பன் டை ஆக்சைடை இந்த தீ விபத்துக்கள் வெளியிட்டுள்ளன. கார்பன் மோனாக்சைடையும் தீ வெளியிடுகின்றன.

உயிரின தொகுப்பு
அமேசான் காடு சுமார் மூன்று மில்லியன் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் ஒரு மில்லியன் பழங்குடி மக்கள் வசிக்கும் இடம். புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் இந்த காட்டின் பங்களிப்பு முக்கியமானது. அமேசான் காடுகள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் கார்பன் வெளியேற்றத்தை உறிஞ்சுகின்றன. இதனால் பூமி வெப்பமயமாவது தடுக்கப்படுகிறது.

பிரேசில், வெனிசுலா, பொலிவியா
ஆனால் மரங்கள் வெட்டப்படும்போது அல்லது எரிக்கப்படும்போது, அவை சேமித்து வைக்கும் கார்பன் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டு சுற்றுச்சூழல் மாசடையும். அமேசான் பிராந்தியத்தில் 9 நாடுகள் உள்ளன. அவை இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான தீ விபத்துகளை சந்தித்துள்ளன. பிரேசிலுக்கு பிறகு வெனிசுலா இரண்டாவது மிக அதிகமான எண்ணிக்கையில் தீ விபத்தை எதிர்கொண்டது. 26,000 க்கும் அதிகமான தீ விபத்துக்கள் அங்கு நடந்தன. பொலிவியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 17,000 க்கும் அதிகமான தீ விபத்துகள் நடந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications