டிரம்ப்புக்கு ஆதரவான கலவரத்தில் இந்திய தேசிய கொடி.. அதிர்ச்சியில் இந்தியர்கள்!
அமெரிக்க வன்முறை போராட்டத்தில் இந்திய தேசிய கொடி பறக்கிறது
வாஷிங்டன்: கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு நடுவில், கலகக்காரர்களின் கூக்குரல்களுக்கு மத்தியில், கண்ணீர் புகை வீச்சுக்கு நடுவில், அமெரிக்க நாடாளுமன்ற வாசலில் குழுமிய கும்பலில் சிலர் நம்முடைய தேசிய கொடியும் கையில் ஏந்தி கலந்து கொண்டுள்ளனர் . இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!
அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜோ பிடன் பெற்ற வெற்றியை எதிர்த்தும், தேர்தல் முடிவுகளை மாற்ற வலியுறுத்தியும் ட்ரம்ப் ஆதரவு கும்பல் நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டது.

அதாவது பிடன் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அவர் பெற்ற தேர்தல் சபை வாக்குகளை எண்ணி சான்றிதழ் அளிக்கும் வழக்கமான நடைமுறையை நாடாளுமன்றம் மேற்கொண்டிருந்தபோது, இந்த கலவரத்தை கரெக்ட்டான நேரம் பார்த்து கையில் எடுத்தது.
இதற்கு பிறகு அந்த கூட்டம் நிறுத்தப்பட்டது.. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்... போராட்டம் வெடித்தது.. துப்பாக்கி சூடும் நடந்தது.. ஒரு பெண்ணும் உயிரிழந்துவிட்டார்.. இது எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக டிரம்ப்புக்கு எதிர்ப்புக் குரல்கள் வெளிவர தொடங்கிவிட்டன.. உலக தலைவர்கள், டிரம்ப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த கலவரம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அதேபோல, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஏராளமானோர் திரண்டு முழக்கமிட்டு வருகிறார்கள்.. அந்த வீடியோவில் கண்ணீர் புகை வீசப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது.. அந்த புகைக்குள் டிரம்புக்கு ஆதரவானோர் அமெரிக்க கொடிகளை தாங்கி பிடித்து ஆக்ரோஷமான, ஆவேசமான முழக்கங்களை எழுப்புகிறார்கள்.. இதற்கு நடுவில்தான் நம்முடைய இந்திய தேசிய கொடி தென்படுகிறது.

நம் தேசிய கொடி மிக நீளமாக இருக்கிறது.. அதை யார் பிடித்திருக்கிறார்கள் என்பது அந்த வீடியோவில் சரியாக தெரியவில்லை.. ஆனால் கொடி மட்டும் அமெரிக்க கொடிகளுடன் சேர்ந்து பறக்கிறது.. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.."அவர்கள் அவங்க நாட்டு பிரச்சனைக்காக போர்க்கொடி உயர்த்தும்போது, நம் தேசிய கொடிக்கு அங்கே வேலை? இது உள்நாட்டு பிரச்சனை? இப்படி ஒரு சண்டையில் நாம் பங்கேற்க தேவையில்லையே.. " என்று இந்தியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications