உலகெங்கும் நாளை முடங்கும் இணைய சேவை.. பின்னணியில் அதிபர் டிரம்ப்? தீயாக பரவும் தகவல்! உண்மை என்ன
வாஷிங்டன்: உலகெங்கும் நாளைய தினம் அதாவது ஜனவரி 16ம் தேதி இணையச் சேவை முடங்க உள்ளதாக இணையத்தில் தீயாகத் தகவல் பரவி வருகிறது. டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்க உள்ள சூழலில், அதையும் இதையும் இணைத்து தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இது உண்மைதானா.. இணையச் சேவை நாளை முடங்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் நமக்கு இணையச் சேவை தான் ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இணையம் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்ற அளவுக்கு இணையச் சேவை அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது.

வங்கியில் சென்று பணம் எடுப்பது முதல் ஆபீஸ் வேலைகள் வரை இப்போது அனைத்திற்குமே இணையச் சேவை தான் அடிப்படைத் தேவையாக உள்ளது. நமது நாட்டில் ஒரு பகுதியில் கொஞ்ச நேரம் இணைய சேவை முடங்கினாலே அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இணையச் சேவை:
இதற்கிடையே ஜனவரி 16ம் தேதி, அதாவது நாளைய தினம் உலகெங்கும் இணையச் சேவை முடங்கும் என்று தகவல் பரவி வருகிறது. அதாவது அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தி சிம்ப்சன்ஸ் என்ற கார்டூன் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கும் ஒரு கார்டூனாக கருதப்படுகிறது. ஏகப்பட்ட நிகழ்வுகளை இதுபோல தி சிம்ப்சன்ஸ் கார்டூன் துல்லியமாகக் கணித்துள்ளது.
இந்த கார்டூனை உருவாக்குவோருக்கு டைம் டிராவல் திறன் இருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே இந்தளவுக்குத் துல்லியமாகக் கணிக்க முடிவதாகவும் நெட்டிசன்கள் பொதுவாகச் சொல்வார்கள். இந்த சிம்ப்சன்ஸ் கார்டூனில் தான் 2025ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, அதாவது நாளை இணையச் சேவை முடங்க உள்ளதாகக் கூறப்பட்டு இருக்கிறது.
டிரெண்டாகும் வீடியோ:
இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இணைய சேவை முடங்கினால் என்ன செய்வது என்பது குறித்தும் கூட நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், இது உண்மை தானா.. தி சிம்ப்சன்ஸ் கார்டூனில் கூறப்பட்டுள்ளது என்ன! அது சொன்னது போல இணையச் சேவை முடங்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தி சிம்ப்சன்ஸ்:
இணையத்தில் பரவும் சிம்ப்சன்ஸ் வீடியோவை பார்த்தாலே அது பெரியளவில் எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவில், டிரம்ப் பதவியேற்பு விழா நடைபெறும் ஜனவரி 16ம் தேதி இணையச் சேவை முடங்கும் என்பது போல இருக்கிறது. ஆனால், உண்மையில் டிரம்ப் வரும் ஜனவரி 20ம் தேதி தான் அதிபராகப் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் சிம்ப்சன்ஸ் தொடர்பான எந்தவொரு வீடியோவும் டிரெண்டாகும். அதேபோலத் தான் இந்த வீடியோவும் இணையத்தில், எல்லா சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவியது. நெட்டிசன்கள் இதற்குப் பலவித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். ஒரு சிலர் நாளை என்ன தான் நடக்கும் என்பதைப் பார்க்கப் போகிறேன் எனப் பதிவிடுகிறார்கள். சிலர் சிம்ப்சன்ஸ் என்ற பெயரில் எது வந்தாலும் நம்ப முடியுமா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இணையச் சேவை முடங்குமா:
அதேநேரம், இன்னும் சிலர் நிச்சயம் இணையச் சேவை முடங்கத் தான் செய்யும் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களில் பாதிப்பு ஏற்பட்டு இணையச் சேவை நிச்சயம் முடங்கும் என்றும் சொல்லி வருகிறார்கள். பெரும்பாலானோர் இதை ஜோக்காகவே பார்த்தாலும் கூட நாளை என்ன தான் நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க மக்கள் ஆர்வமாகவே உள்ளனர். இது வெறும் ஜோக் தானே தவிர, நாளை இணையச் சேவை பாதிப்பதற்கான எந்தவொரு முறையான அறிவிப்புகள் இல்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications