Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமலாவிற்கு கை கொடுத்த கலிபோர்னியா.. முடிவுகளை மாற்ற காத்திருந்த மாகாணங்களில் நடந்த பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு கைகொடுத்திருந்தது கலிபோர்னியா மாகாணம். அங்கு வென்றதால் ஒரே அடியில் 50 எலக்ட்ரோல் வாக்குகள் கமலா ஹாரிஸுக்கு விழுந்தது. ஆனால் பென்சில்வேனியா உள்பட பல்வேறு ஸ்விங் மாநிலங்களில் டிரம்ப் அடுத்தடுத்து வென்றதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது,

அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் அப்போது மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவில்லை.. அவருக்கு பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் இறங்கி உள்ளார்.

us president election result 2024 us president election 2024 donald trump kamala harris 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கும். மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்தியாவில் எப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கு 10, 15 அல்லது 80 எம்பிக்கள் வரை ஆதரவு உள்ளதோ, அதுபோல் தான் அமெரிக்காவில் ஒரு மாநிலத்திற்கு என்று எலக்ட்ரோல் வாக்குகள் கிடைக்கும். மொத்தமாக ஒரு மாநிலத்தை ஒரு கட்சி வெல்ல முடியும்.. அப்படித்தான் அங்கு வெற்றி இருக்கும்.

இதன்படி யார் அதிக எலக்ட்ரோல் மதிப்பு கொண்ட மாகாணங்களை வென்று, 270 என்ற மேஜிக் எண்ணை தொடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாகிறார்கள். ஒருவேளை அதிக வாக்குகள் பெற்றால் கூட எலக்ட்ரோல் வாக்குகள் அதிகமாக இருந்தால் தான் அதிபராக முடியும். அதாவது 270 என்ற மேஜிக் எண்ணை தொட்டால் தான் அதிபராக முடியும். கடந்த 2016ம் ஆண்டு அதிக வாக்குகள் பெறவிட்டாலும், எலக்ட்ரோல் வாக்குகள் அதிகம் பெற்று டிரம்ப் இப்படித்தான் வென்று அதிபரானார்.

அமெரிக்காவில் மொத்தம் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் ஆவர். இதில் பலர் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர். இந்தநிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று நடந்து முடிந்தது. இந்நிலையில் ஆரம்பம் முதலே டிரம்ப் தான் முன்னிலை வகித்து வருகிறார். ப்ளோரிடா, டெக்சாஸ், நார்த் கரோலினா, ஓகியோ, இண்டியானா, வடக்கு கரோலினா, மிசோரி உள்பட 24 மாகாணங்களில் டிரம்ப் இதுவரை வெற்றி பெற்றுள்ளார். இங்கு 230 இடங்கள் உள்ளன. அதேபோல் கலிபோர்னியா, நியூயார்க், மாசாசெட், வாஷிங்டன், மேரிலேண்ட், ஒரேகான், கோலர்டா உள்பட 15 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் 14 மாகாணங்களில் பாதியை வென்றாலே டிரம்ப் வெற்றி பெற்றுவிடுவார் என்கிற நிலை இருந்தது.

இதனிடையே கமலா ஹாரிஸ் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் வென்றதால், ஒரே அடியில் 50 எலக்ட்ரோல் வாக்குகள் கிடைத்தது. எனினும் கமலாவை பொறுத்தவரை வெற்றி பெற வேண்டும் என்றால், ஜார்ஜியா, பென்சில்வேனியா, வெர்ஜினா, அரிசோனா, மின்னிசோடா உள்பட பெரும்பாலான மாகாணங்களில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல டிரம்புக்கு வெற்றி பெறுதவற்கான வாய்ப்பு அதிகமானது. ஏனெனில் ஸ்விங் மாகாணங்களில் அவர் அடுத்தடுத்து வெற்றி பெற்றார். டொனால்டு டிரம்ப் 267 இடங்களில் முன்னிலையில் உள்ளார். கமலா ஹாரிஸ் வெறும் 224 இடங்களில் தான் முன்னிலையில் உள்ளார். வெறும் 3 இடங்களில் வென்றாலே டிரம்ப் வெற்றி என்ற நிலை உள்ளது. ஆனால் கமலா ஹாரிஸை பொறுத்தவரை இனி அனைத்து இடங்களிலும் வென்றாக வேண்டும்.. அப்போது தான் அவர் அதிபராக முடியும்.ஆனால் அது எளிதல்ல..எனவே தற்போதைய சூழலில் டிரம்ப் அதிபராவது உறுதி என்கிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+