என்னாது.. இந்த நாட்டுல 15 வயசானாலே கல்யாணம் பண்ணிருவாங்களா.. இங்க பாருங்க லிஸ்ட்!
வாஷிங்டன்: உலகில் பெரும்பாலான நாடுகளில் குழந்தை திருமணங்களை ஒடுக்க கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில நாடுகள் இன்னமும் குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக அனுமதித்து வருகிறது. அது எந்தெந்த நாடுகள் என்ற விவரங்களை பார்க்கலாம்.
உலகில் மனித சமூகம் எத்தனையோ துறைகளில் வளர்ச்சி கண்டு விட்டது. நாகரீக சமூகம் வாழ தொடங்கியதில் இருந்து மனிதன் தனக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதற்குள் வாழத் தொடங்கினான். அந்த வரிசையில் தோன்றியதுதான் சட்ட திட்டங்களும்.

அதன்படி ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்பவும் சட்ட திட்டங்களும் மாறத் தொடங்கின. மனிதன் தற்போது எத்தனையோ துறைகளில் முன்னேற்றம் அடைய தொடங்கினாலும் இன்னும் சில நாடுகளில் குழந்தை திருமணங்கள் சட்டப்பூர்வமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?...
ஆம் சட்ட அங்கீகாரம் இன்றி பல நாடுகளில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இந்தியாவிலும் கூட குழந்தை திருமணங்களை ஒழிக்க கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வந்தாலும் கூட இன்னமும் இந்த அவலம் நடப்பதாகவே சில தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை பெண்ணின் சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆகும். ஆணுக்கு 21 வயதாக உள்ளது. பெண்ணின் திருமண வயதையும் உயர்த்துவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. உலகில் பெரும்பாலான நாடுகளில் குழந்தை திருமணங்களை ஒடுக்க கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில நாடுகள் இன்னமும் குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக அனுமதித்து வருகிறது. அந்த நாடுகளின் விவரங்களை பார்க்கலாம்:-
* லிதுவேனியா: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் 15 வயதில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் 15 வயதுக்கு கீழே கூட நீதிமன்ற அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்ள முடியும். கர்ப்பமாக இருந்தால் நீதிமன்றத்தை அணுகி இந்த அனுமதியை பெற முடியுமாம்.
* ஆஸ்திரியா: ஆஸ்திரியா நாட்டில் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வ வயது 18 என்றாலும் பெற்றோர் ஓப்புதலுடன் 16-வயதில் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
* எஸ்டோனியா: எஸ்டோனியா நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடும்ப சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உள்ளது. ஆனாலும் நீதிமன்ற அனுமதி பெற்று 15- வயதிலேயே பெண்களும் ஆண்களும் திருமணம் செய்து கொள்ள அந்த நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகவும் குறைந்த திருமண வயது திருமணத்தை அனுமதிக்கும் நாடு எஸ்டோனியாதான்.
* சூடான்: சூடான் நாட்டில் அந்நாட்டு பெண்கள் 10 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தது. ஆண்கள் 15 வயதில் திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தது. எனினும் கடந்த 2020 ஆம் இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டு திருமண வயது 18 ஆக மாற்றியமைக்கப்பட்டது.
* தான்சானியா: தான்சானியா நாட்டில் பெண்கள் 12 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்து இதை ஒழித்தது.
சட்டப்பூர்வ வயது இப்போது ஏறத்தாழ அனைத்து நாடுகளில் 18 ஆகிவிட்டாலும் இன்னமும் கூட சட்ட விரோத குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை ஒழிக்க உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications