"அழகே பொறாமைப்படும் பேரழகு.." மாதம் 9 லட்சம் சம்பாதிக்கும் AI மாடல்! உச்சக்கட்ட கடுப்பில் அழகிகள்!
வாஷிங்டன்: ஏஐ வேற லெவலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ள நிலையில், நீங்கள் நம்பவே முடியாத ஒரு சம்பவம் நடந்துள்ளது. உங்கள் கண்களை ஏமாற்றும் இந்தச் சம்பவம் குறித்து நாம் பார்க்கலாம்.
ஐரோப்பாவில் மாடல் உலகில் இப்போது கலக்கி வரும் டாப் அழகி தான் இந்த அயிட்டனா லோபஸ். இந்த மாடல் அழகிக்கு அங்கே நாடு முழுக்க ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். இணையத்திலும் நெட்டிசன்கள் இவரைக் கொண்டாடுவார்கள்.

இன்ஸ்டாகிராமில் கூட அவரது ப்ரோபைல் பக்காவாகவே இருக்கும். விளையாட்டில் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏஐ மாடல்: இன்ஸ்டாகிராமிலும் இவருக்கு 1.41 லட்சம் பாலோயர்ஸ்கள் உள்ளனர். ஆனால், இப்படியொரு மாடல் உண்மையாக இல்லவே இல்லை.. இது முழுக்க முழுக்க கணினி ஏஐ மாடல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால், அது தான் உண்மை.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
முழுக்க முழுக்க ஏஐ மாடலை வைத்து உருவாக்கப்பட்ட 25 வயதான ஸ்பானிஷ் மாடல் தான் அயிட்டனா லோபஸ்.. இன்ஸ்டாகிராமில் அங்கே பிரபலமான மாடல்களில் ஒருவராக இவர் இருக்கிறார். இந்த ஏஐ மாடல் ஒரு மாதத்திற்குச் சம்பாதிக்கும் தொகையைக் கேட்டால் நிச்சயம் ஒரு நொடி நீங்கள் ஆடிப்போவீர்கள். அதாவது இந்த ஏஐ மாடல் அதிகபட்சமாக 10,000 யூரோ, அதாவது சுமார் ரூ.9 லட்சம் சம்பாதிக்கிறதாம். இந்த ஏஐ மாடல் தான் இப்போது அங்கே டிரெண்டிங்கில் இருக்கிறது.
உருவாக்கியவர் யார்: ரூபன் குரூஸ் என்பவர் தனது தி க்ளூலெஸ் நிறுவனம் மூலம் தான் இந்த ஏஐ மாடலை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் அடிப்படையில் ஒரு டிரஸ் டிசைனர். ஒரு கட்டத்தில் எனது அனைத்து ப்ராஜெக்ட்களும் பிரச்சினையை எதிர்கொண்டது. எனக்கும் மாடல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் டிசைன்கள் நன்றாக இருந்தாலும் அதை அணிய அவர்கள் மறுத்தார்கள். இதனால் பல ப்ராஜெக்ட்கள் ரத்தானது.
அப்போது தான் நான் அயிட்டனாவை உருவாக்க முடிவு செய்தேன். இதன் மூலம் நான் எனது டிசைன்களை உலகிற்குக் காட்ட முடியும். ஈகோ உள்ளவர்களுடன் வேலை செய்யத் தேவையில்லை. சிலர் டிரஸை அணிந்து போஸ் கொடுக்கவே ஓவராக காசு வாங்குகிறார்கள். அதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதற்காகவே இந்த ஏஐ மாடலை உருவாக்கினேன்" என்கிறார்.
தாறுமாறு ஹிட்: தனது ஏஐ மாடலுக்கு டிஜிட்டல் முறையில் இவர் தனது ஆடைகளைப் போட்டு இணையத்தில் பதிவிட அது உடனடியாக ஹிட் அடித்தது. அதன் பின்னர் வெளியில் இருந்தும் கூட இந்த மாடல் குறித்த தகவலைக் கேட்டு இவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிறகே இது ஏஐ மாடல் என்பதைச் சொல்லிப் புரிய வைத்துள்ளார். இருப்பினும், இப்போது பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களிலும் இந்த ஏஐ மாடல் இருக்கிறதாம். இதன் மூலமே அவர் பல லட்சத்தை அள்ளுகிறார்.
இது ஏஐ என்பதைத் தெரியாமல் பல நடிகர்களும் மாடல்களும் கூட டேட் போகலாம் என்று இன்ஸ்டாகிராமில் அன்புத் தொல்லை கொடுப்பதாகவும் ரூபன் குரூஸ் குறிப்பிடுகிறார். மேலும், இந்த ஏஐ மாடலின் எந்த போட்டோக்களை ரிலீஸ் செய்யலாம் என்பதை ரூபன் குரூஸ் மற்றும் அவர்களின் டீம் தான் முடிவு செய்கிறார்கள். அயிட்டனாவின் போட்டோஷூட் வழக்கமான போட்டோஷூட் போல இருக்காது. அவை ஏஐ சார்ந்ததாகவே இருக்கும். போட்டோஷாப் மூலம் டிரஸை போட்டுவிடுவார்களாம்.
ஹிட் அடித்தது ஏன்: இந்த ஏஐ மாடலை இவர்கள் தங்கள் விருப்பம் போல எல்லாம் உருவாக்கவில்லை. இணையத்தில் நெட்டிசன்கள் அதிகம் எதை விரும்புகிறார்கள் என்பதை ஆராய்ந்தே இதை உருவாக்கியுள்ளனர். அவரது பிங்க் முடி முதல் கேமர் லுக் வரை அனைத்தும் நெட்டிசன்களை கவரும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ மாடல் ஹிட் அடித்த நிலையில், இந்த நிறுவனம் அல்ல. மாயா என்ற மற்றொரு ஏஐ மாடல்களையும் உருவாக்கியுள்ளனர். இந்த இரண்டும் தான் இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
அமெரிக்க சட்ட சவால்களை கடந்துவிட்டோம்.. ஏஐ-யில்தான் இனி கவனம்! கவுதம் அதானி நம்பிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications