மணமாலையும் மஞ்சளும் சூடி.. கடைசி நாளில் டிரம்ப் மகள் நிச்சயதார்த்தம்!
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் பதவி விலகும் கடைசி நாளில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் மகள் டிப்பனி டிரம்ப் (27), தனது நிச்சயதார்த்தத்தை நடத்தி உள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார்.
இதனால் தற்போது அதிபராக உள்ள டிரம்ப், வெள்ளை மாளிகையில் தனது கடைசி பணி நாளில், அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக பிரார்த்தனை நடத்தியதுடன், ஜோ பைடன் பெயரை குறிப்பிடாமல் பிரிவு உபசார உரையை நிகழ்த்தினார்.

2வது மனைவியின் மகள்
இதற்கிடையில் டிரம்பின் 2வது மனைவியின் ஒரே மகளான டிப்பனி டிரம்ப், தந்தையின் கடைசி பணி நாளில் வெள்ளை மாளிகையில் தனது நிச்சயதார்த்தத்தை நடத்தி உள்ளார். ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் சட்டப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ள டிப்பனி, நைஜீரியா நாட்டு தொழிலதிபரான பவுலஸ் மைக்கேல் (23) என்பவரை காதலித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம்
வெள்ளை மாளிகையில் தந்தையின் கடைசி பணி நாளான நேற்று தனது நிச்சயதார்த்தத்தை நடத்தி உள்ளார். தனது வருங்கால கணவருடன் வெள்ளை மாளிகையில் தான் எடுத்தக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது குடும்பத்தில் பல மறக்க முடியாத நினைவுகள், வரலாற்று நிகழ்வுகள், பல மைல்கற்களை கொண்டாடிய வெள்ளை மாளிகையில் எனது நிச்சயதார்த்தம் நடப்பதை கவுரவமாக நினைக்கிறேன். எனது வருங்கால கணவர் மைக்கேலுடன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை துவங்குவதை அற்புதமானதாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

லவ் யூ ஹனி
இதே போட்டோவை பவுல்சும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, எனது வாழ்வின் காதலுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நாங்கள் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் டிப்பனியின் பதிவில், "லவ் யூ ஹனி" என கருத்து பதிவிட்டுள்ளார். டிரம்ப்பின் இரண்டாவது மனைவியான மர்லா மேப்லிஸின் ஒரே மகளான டிப்பனி, 2018 ம் ஆண்டு முதல் முறையாக தனது காதலருடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டார்.

சின்ன மகள்
டிரம்ப் இதுவரை தனது முதல் மனைவியான இவானா மற்றும் அவரது குழந்தைகளின் படங்களை மட்டும் பகிர்ந்து வந்துள்ளார். ஆனால் பவுலஸ் கடந்த 2 ஆண்டுகளாக டிரம்ப் பங்கேற்கும் போட்டோக்களை பதிவிட்டு வந்தார். தனது தந்தை மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது பிரசாரத்தில் பங்கேற்றதன் மூலம் அரசியல் ரீதியான பார்வை டிப்பனி மீது பதிந்தது. தேர்தல் சமயத்தில் மிச்சிகன், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் தலைப்பு செய்திகளிலும் இடம்பெற்றவர் டிப்பனி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications