Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் சுனாமி வரும்.. நம்பலைன்னா பாருங்க.. 2671வது ஆண்டிலிருந்து "வந்த நபர்" பரபர

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டைம் டிராவல் மூலம் நான் 2671-ஆம் ஆண்டில் இருந்து வந்திருப்பதாகவும், அடுத்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெரிய சுனாமி வர இருப்பதாகவும் ஒருவர் கூறியிருப்பது இணையத்தில் பரவி வருகிறது.

விந்தைகள் நிறைந்த இந்த உலகத்தில் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது.

ஆனால், அதை அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாத நபர்களே இருக்க முடியாது. அடுத்த 50 ஆண்டுகளில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று நம்மில் பலரும் கற்பனை செய்து இருப்போம்.

டைம் டிராவல் என்று ஒன்று உள்ளதா?

டைம் டிராவல் என்று ஒன்று உள்ளதா?

இது தொடர்பாக யூடியூப்களில் கூட பல வீடியோக்களும் நிரம்பி இருக்கின்றன. டைம் டிராவல் கதையை களமாக கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஏன் தமிழிலில் கூட நேற்று இன்று நாளை படம் டைம் டிராவல் கதையை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு இருக்கும். உண்மையில் டைம் டிராவல் என்று ஒன்று உள்ளதா? என்பது குறித்த விவாதம் பல ஆண்டுகளாகவே நீடித்து கொண்டு இருக்கிறது.

2671-ஆம் ஆண்டில் இருந்து வந்திருக்கிறேன்

2671-ஆம் ஆண்டில் இருந்து வந்திருக்கிறேன்

இது ஒருபுறம் இருக்க மேலை நாடுகளில் அவ்வப்போது சிலர் டைம் டிராவல் பண்ணி வந்து இருப்பதாக கூறி பீதியை கிளப்பி கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படித்தான், டிக்-டாக் சமூக வலைத்தளத்தில் ரேடியன்டைம்டிராவலர் (@radianttimetraveller) என்ற யூசர் ஒருவர் தான் 2671- ஆம் ஆண்டில் இருந்து வந்திருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வானத்தில் இருந்து 7 பேர் பூமியில் விழுவார்கள் எனவும் பதிவிட்டு பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

7 பேர் வானத்தில் இருந்து விழுவார்கள்

7 பேர் வானத்தில் இருந்து விழுவார்கள்

இத்தனைக்கும் அந்த பகுதியில் எந்த விமானமும் பறக்காது, ஆனாலும் 7 பேர் வானில் இருந்து விழுவார்கள் என்று கூறியதுதான் ஹைலைட் விஷயம் ஆகும். @radianttimetraveller என்ற டிக்-டாக் கணக்கு வழியாக எனோ அலரிக் என்பவர்தான் இந்த பதிவை போட்டுள்ளார். இதைத்தவிர மேலும் சில திகிலூட்டும் பதிவுகளை அவர் வெளியிட்டு இருப்பதுதான் தற்போது டிக்டாக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பரபரப்பாக பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.

முக்கிய ஐந்து சம்பவங்கள்

முக்கிய ஐந்து சம்பவங்கள்

எச்சரிக்கை! என்று கூறி அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:- "நான் 2671 ஆம் ஆண்டில் இருந்து டைம் டிரவல் பண்ணி வந்து இருக்கிறேன். முக்கிய சம்பவங்கள் நடக்கும் ஐந்து தேதிகள் குறித்து எச்சரிக்கவே நான் வந்து இருக்கிறேன்.

பூமியை போல ஒரு கோள்

பூமியை போல ஒரு கோள்

ஒன்று:- வரும் 30 ஆம் தேதி பூமியை அப்படியே பிரதிபலிக்கும் வகையிலான ஒரு கோளை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிய இருக்கிறது.

இரண்டு:- 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பெர்முடா முக்கோண சந்திப்பு வழியாக செல்லும் விமானம் ஒன்று மாயம் ஆகும்.

அமெரிக்காவில் சுனாமி

அமெரிக்காவில் சுனாமி

மூன்று:- 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி கடலில் வந்ததாக கூறி உலகம் முழுவதும் பரபரப்பாக ஒரு செய்தி பரவும்.

நான்கு:- 2023-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி கலிபோர்னியா கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கும். குறிப்பாக 750 அடி உயரத்தில் கடல் அலைகள் எழும். சான் பிரன்ஸிஸ்கோ நகரில் தான் முக்கியமாக இந்த சுனாமி அடிக்கும். என்று பதிவிட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

எனினும், இவரது பதிவின் நம்பகத்தன்மை பற்றி நெட்டிசன்கள் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும் எப்போதும் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே கூறுவது ஏன் எனவும் சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அதேபோல், எதிர்காலத்தில் இருந்து வந்து இருப்பதாக கூறும் இவர், அடுத்த சில மாதங்களில் எப்படி வசதி மிக்கவராக மாறலாம் என்பது குறித்தும் நம்மிடம் அவரால் சொல்ல முடியும் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+