‛ஸ்பெல்லிங் மிஸ்டேக்'கால் மேஜிக்.. இன்று பிறந்தநாள் கொண்டாடும் Google.. பெயரின் சுவாரசிய பின்னணி
வாஷிங்டன்: கூகுள் (Google) இன்று தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தும் சர்ச் இன்ஜினாக கூகுள் உள்ளது. பல கோடி மக்கள் உச்சரிக்கும் இந்த கூகுள் பெயர் வருவதற்கு முக்கிய காரணம் சின்ன ‛ஸ்பெல்லிங் மிஸ்டேக்' தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மை தான். இந்த நிறுவனத்துக்கு கூகுள் என பெயர் சூட்டப்பட்டதன் பின்னணி பற்றி இன்று விரிவாக பார்க்கலாம்.
இன்று செப்டெம்பர் 27 ம் தேதி. இன்று தான் கூகுள் பிறந்த தினம். கடந்த 1998 ம் ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி கூகுள் நிறுவனம் உருவானது. இன்று 27 வது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இதையடுத்து கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு doodle படத்தை வெளியிட்டுள்ளது.

சரி இது இருக்கட்டும். தினமும் கூகுளை பயன்படுத்தி வரும் நாம் கூகுள் நிறுவனத்துக்கு அந்த பெயர் எப்படி வந்தது? என்று நினைத்து பார்த்தது உண்டா. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ‛ஸ்பெல்லிங் மிஸ்டேக்'கால் தான் அந்த நிறுவனத்துக்கு கூகுள் என்று பெயர் வந்துள்ளது. ஆம் நீங்கள் படித்தது சரிதான். கூகுள் என்ற பெயர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் எப்படி உருவானது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கூகுள் சர்ச் இன்ஜின்
கூகுள்.. இந்த வார்த்தையை உச்சரிக்காதவர்கள் உலகில் இருக்கமாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர். ஏதாவது ஒரு விஷயம், டேட்டா வேண்டும் என்றால் நாம் உடனடியாக கூகுளில் தான் தேடுகிறோம். இப்படி உலகம் முழுவதும் உள்ள விஷயத்தை நம்மிடம் கொண்டு வரும் இந்த கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த கூகுள் நிறுவனம் கடந்த 1998 ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் என்பவர்களால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க்கில் சிறிய கேரேஜில் தான் இந்த நிறுவனம் உருவானது. ஆனால் இன்று உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் சர்ச் இன்ஜினாக கூகுள் மாறி உள்ளது.
ஸ்பெல்லிங் மிஸ்டேக்
சாதாரண நாம் நிறுவனங்களை தொடங்கும் போது கூட அதற்கான பெயரில் அதிக கவனம் வைப்போம். அதேபோல், நம் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கவனமாக பெயர் வைப்போம். குல தெய்வம், முன்னோர்களின் பெயர்கள் அல்லது அந்த பெயர்களில் உள்ள எழுத்துகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பெயர் வைப்போம்.
இதற்காக நீண்ட விவாதமே வீட்டில் நடக்கும். அப்படி இருக்கும்போது உலகிலேயே முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள் பெயர் மட்டும் ‛ஸ்பெல்லிங் மிஸ்டேக்'கால் உருவாகி இருக்க முடியுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கான விளக்கத்தை இந்த செய்தியில் விளக்கம் தருகிறோம்.
முதலில் வைத்த பெயர்
இன்று கூகுள் நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து இருக்கலாம். உலகிலேயே பல கோடி மக்கள் பயன்படுத்தும் சர்ச் இன்ஜினாக கூகுள் இருக்கலாம். அதேபோல் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப் முதல் ஜெமினி AI வரை பல்வேறு சேவைகளை கூகுள் கால்பதித்து கொண்டே செல்லலாம். ஆனால் தொடக்கத்தில் கூகுள் சிறிய நிறுவனமாக தான் அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் கேரேஜில் தான் கூகுள் நிறுவனம் தொடங்கியது.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோர் புதிய சர்ச் இன்ஜினை தொடங்க வேண்டும் என்று நினைத்தனர். இதற்கான ஆய்வு பணிகளை தொடங்கினர். அதற்கு அவர்கள் வைத்த பெயர் BackRub. அதன்பிறகு அந்த பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். 1997ம் ஆண்டில் புதிய பெயர் சூட்ட முடிவு செய்தனர். கூகோல்ப்ளெக்ஸை (Googolplex) என்ற பெயரை பயன்படுத்த விரும்பினர்.
Googol அர்த்தம்
இது பெரிய பெயராகவும், உச்சரிப்பதற்கு சிரமமாக இருப்பதாக நினைத்தனர். இதனால் அந்த பெயரில் plex என்ற வார்த்தையை விட்டு விட்டு Googol என்ற பெயரை பயன்படுத்த விரும்பினர். Googol என்பது ஒரு எண்ணை குறிக்கும். அதாவது ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் 100 பூஜ்ஜியங்களை சேர்த்தால் ஒரு எண் வரும் அல்லவா? அந்த எண்ணை தான் இந்த Googol குறிக்கும்.
இந்த வார்த்தை கணிதவியலாளர் எட்வர்ட் காஸ்னரின் மருமகன் மில்டன் சிரோட்டாவால் உருவாக்கப்பட்டது. தங்களின் சர்ச் இன்ஜினை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை Googol என்ற எண்ணை போலவே பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த பெயரை தேர்வு செய்தனர்.
பெயர் மாறியது இப்படித்தான்
அதன்பிறகு இந்த பெயரை ரிஜிஸ்டர் செய்யும் பணியை மற்றொரு ஸ்டான்ஃபோர்டு பட்டதாரியான சீன் ஆண்டர்சன் மேற்கொண்டார். Googol என்ற பெயரில் டொமைன் கிடைக்கிறதா என்று ஆன்லைனில் தேடினார். அப்போது அவர் Googol என்பதற்கு பதில் Google என்று டைப் செய்தார். மேலும், Googol என்று தான் டைப் செய்ததாக நினைத்து அவர் டொமைனையும் பெற்றார்.
இதனால் Googol என்பதற்கு பெயர் Google டொமைன் கிடைத்தது. இதையடுது்து வேறு வழியின்றி அவர்கள் Google என்று பயன்படுத்த தொடங்கினர். இப்படி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் உருவானது தான் கூகுள் நிறுவனம். இப்போது இந்த நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வலம் வருகிறது.












Click it and Unblock the Notifications