பூமியில் மிச்சமிருக்கும் தங்கம்.. இந்த 5 நாடுகளிடமே இருக்கு! டாப்பில் இருக்கும் நாடு எதுன்னு பாருங்க
வாஷிங்டன்: உலக அளவில் வெட்டி எடுக்கப்படாத தங்கச் சுரங்கம் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள் எவை எவை என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
உலக பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக தங்கம் உள்ளது. ஒரு நாட்டின் பண மதிப்பை நிர்ணயிப்பதிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்தை பொறுத்தவரை சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படுகின்றன.

டாப் 5 நாடுகள் என்னென்ன?
உலக அளவில் வேகமாக குறைந்து வரும் கனிமங்களில் ஒன்றாக தங்கம் உள்ளது. 2025 ஆண்டு முடிவின்படி சொற்ப எண்ணிக்கையில் உள்ள நாடுகளே உலகின் பெரும் பங்கு தங்கத்தை வைத்துள்ளன. இன்னும் வெட்டி எடுக்கப்படாத தங்க சுரங்கங்களை வைத்து கணக்கிட்டால், 10 நாடுகளிடம் 85 சதவீதம் தங்க சுரங்கங்கள் உள்ளன. இந்த பட்டியலில் டாப் 5-ல் உள்ள நாடுகளின் பட்டியலை பார்க்கலாம்.
கனடா
உலகில் வெட்டி எடுக்கப்படாத (unmined) தங்க கையிருப்பில் கனடா ஐந்தாவது இடத்தில் உள்ளது. கனடாவில் சுமார் 3,200 டன் வெட்டி எடுக்கப்படாத தங்கம் இருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் 449 பில்லியன் டாலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜி7 நாடுகளில் மைய வங்கியில், தங்க கையிருப்பே இல்லாத நாடாக கனடா இருந்தாலும், உலகின் முன்னணி தங்க உற்பத்தி நாடுகளில் ஒன்றாக அந்த நாடு இருக்கிறது.
தங்கம் விலை உயர்வு மற்றும் புதிதாக உருவாக்கப்படும் தங்க சுரங்கங்களின் அடிப்படையில் அந்த நாட்டின் தங்க உற்பத்தி அமைகிறது. கனடாவின் வெட்டி எடுக்கப்படாத தங்க கையிருப்பின் பெரும்பகுதி ஒன்டாரியோ, க்யூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளில் உள்ளதாக விஷுவல் கேப்பிடலிஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா
இந்த பட்டியலில் 4 ஆம் இடம் பெற்றுள்ள நாடு இந்தோனேஷியா. உலகில் வெட்டி எடுக்கப்படாத தங்க கையிருப்பில் இந்தோனேஷியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தோனேஷியாவில் சுமார் 3,800 டன் வெட்டி எடுக்கப்படாத தங்கம் இருப்பதாகவும், அதன் சந்தை மதிப்பு சுமார் 505 பில்லியன் டாலர் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தோனேஷியா, புதிய ஆய்வுகள் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்ற நாடாக திகழ்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள பெருமளவு வெட்டி எடுக்கப்படாத தங்கம், உலக தங்க வினியோக சங்கிலியில் அந்த நாட்டை முதன்மையாக வைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா
இந்த லிஸ்டில் மூன்றாம் இடத்தில் உள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. இங்கு சுமார் 5,000 டன் வெட்டி எடுக்கப்படாத தங்கம் இருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் 701 பில்லியன் டாலர் எனவும் கணிக்கப்படுகிறது. உலகின் முன்னணி தங்க உற்பத்தி நாடாக நீண்ட வரலாறு கொண்டிருந்தாலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இன்னும் பயன்படுத்தப்படாத தங்க வளங்களில் மிகப்பெரிய பங்கினை தென் ஆப்பிரிக்காவே வைத்துள்ளது.
பாதுகாப்பான முதலீட்டு சொத்துகளுக்கான உலகளாவிய தேவை மற்றும் கையிருப்பு பன்முகத்தன்மை (reserve) அதிகரித்து வரும் நிலையில், இந்த தங்க வளங்கள் தென் ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
ஆஸ்திரேலியா
உலகில் பயன்படுத்தப்படாத தங்க கையிருப்பில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 12,000 டன் தங்கம் இன்னும் சுரங்கமாக எடுக்கப்படாமல் இருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் 1.687 டிரில்லியன் டாலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தங்க கையிருப்பின் பெரும்பகுதி வளமிகுந்த மேற்கு ஆஸ்திரேலியாவின் யில்கார்ன் கிரேட்டான் பகுதியில் அமைந்துள்ளது.
ரஷ்யா
உலகளவில் வெட்டி எடுக்கப்படாத தங்க கையிருப்பில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. பரப்பளவில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவிடம் சுமார் 12,000 டன் தங்கம் இன்னும் தோண்டப்படாமல் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.687 டிரில்லியன் டாலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்க இருப்புகள் சைபீரியா மற்றும் தூர கிழக்கு பகுதிகளில் உள்ளன. குறிப்பாக கிராஸ்நோயார்ஸ்க், மகடான் பகுதிகளிலும், அமூர், சுகோட்கா மாவட்டங்களிலும் பெரிய அளவிலான பயன்படுத்தப்படாத தங்கம் உள்ளன. இவை ரஷ்யாவின் நீண்டகால புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார யுக்திக்கு முக்கியத் தூணாக உள்ளன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications