"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கப் படைகள் முதலில் கியூபாவில் இறங்கி அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்தது. அடுத்து இப்போது ஈரானில் 4 வாரங்களாகப் போரை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், டிரம்ப் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அடுத்து கியூபா தான் எனச் சொல்லியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிபராகக் கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டிரம்ப் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். கடந்தாண்டு முழுக்க டிரம்பின் வரி விவகாரமே மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே அடுத்து இந்தாண்டு முழுக்க அவர் ஒவ்வொரு நாட்டிலும் சென்று பிரச்சினை செய்து வருகிறார்.

Trump about Cuba Caribbean nation Is Next After Touting US Military Successes in Iran and Venezuela

அமெரிக்கா

முதலில் கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவில் இறங்கிய அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்தார். அடுத்து பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது போரை ஆரம்பித்தார். இந்த போர் சில நாட்களில் முடியும் என டிரம்ப் நினைத்த சூழலில், ஈரானின் பதிலடிகளால் ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்கிறது. இந்த பரபரப்புகளே முடியாத நிலையில், அவர் வேறு ஒரு சர்ச்சை கருத்தைக் கூறியுள்ளார்.

கியூபா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மியாமியில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வெனிசுலா மற்றும் ஈரானில் அமெரிக்க ராணுவம் வெற்றி அடைந்ததாகச் சொல்லிய டிரம்ப்ஸ அடுத்து கியூபா தான் எனக் குறிப்பிட்டார். கியூபாவின் ஹவானா அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியால் சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், கியூபாவுக்கான அவரது திட்டங்களை அவர் வெளிப்படையாக விளக்கவில்லை.

டிரம்பின் நிர்வாகம் அண்மைய வாரங்களாகக் கியூபா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வருகிறது. மேலும், அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கச் சாத்தியம் இருப்பதாகவும் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். ஏற்கனவே, டிரம்ப் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் கொந்தளிப்பான ஒரு சூழல் இருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்து மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கை என ஆரம்பித்தால் தேவையில்லாத குழப்பங்களே ஏற்படும்.

அடுத்து கியூபா தான்

இது தொடர்பாக டிரம்ப் மேலும் பேசுகையில், "நான் தான் இந்த மகத்தான ராணுவத்தை உருவாக்கினேன். உலகின் மிகச் சிறந்த ராணுவம் இருப்பதால் இதைப் பயன்படுத்தாமலேயே உங்களால் வெல்ல முடியும். ஆனாலும் சில சமயங்களில் நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். நமது அடுத்த இலக்கு கியூபா தான்" என்று அவர் பேசினார். அத்தோடு நிற்காமல், "நான் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றே நினைத்துக் கொள்ளுங்கள்" என்று மேலும் புரியாமல் பேசி குழப்பினார்.

இதற்கிடையே, ராணுவ மோதலைத் தடுக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் கியூபா ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் ஒப்புக்கொண்டார். மின் உற்பத்தி, போக்குவரத்திற்கான எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட தடங்கல்களால் கியூபாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் போடும் அமெரிக்கா

கடந்த ஜனவரியில் வெனிசுலா நாட்டில் இறங்கி அமெரிக்கப் படைகள் அந்நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மடூரோவை கைது செய்தது. அதற்கு முன்பு வரை கியூபாவுக்கு தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் தேவையை வெனிசுலாவே பூர்த்தி செய்து வந்தது. ஆனால், வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்தவுடன் நிலைமை மாறியது. அமெரிக்காவின் அழுத்தத்தால் புதிய வெனிசுலா அரசு கியூபாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்புவதை நிறுத்தியது. இதுவே கியூபாவின் நிலைமையை மோசமாக்கியது. கியூபா மிக மோசமான சூழலில் இருக்கும் நிலையில் தான், அடுத்த டார்கெட் கியூபா என்பது போல டிரம்ப் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+