அமெரிக்காவில் வேலை செய்ய ரூ.95 லட்சம் தனி கட்டணம்.. டிரம்ப் அரசு திட்டம்.. இந்தியர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி தரக்கூடிய புதிய திட்டத்தை டிரம்ப் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.. அமெரிக்காவில் படிப்பை முடித்த பிறகு அங்கேயே வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் 1 லட்சம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும், மாணவர் விசா விதிகளிலும் பெரிய மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி வெளிநாடு செல்வோரின் முதல் சாய்ஸ்ஸாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்காவில் தற்போதுள்ள விதிகளின்படி அங்கு உயர் கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு சில ஆண்டுகள் அங்கேயே வேலை செய்யலாம். ஆனால், இதை மாற்றி இந்த சூழலில் தான் அதற்கும் தனி கட்டணத்தை அறிவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.

Donald Trump India visa US jobs for Indians

தனி கட்டணம்

அதாவது வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய தனியாக ரூ.95 லட்சம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இப்போது இருக்கும் விதிகளின்படி அமெரிக்காவில் F-1 மாணவர் விசாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு ஓபிடி, அதாவது Optional Practical Training, என்ற திட்டத்தின் கீழ் தாங்கள் படித்த துறையிலேயே வேலை செய்ய அனுமதி பெறுகிறார்கள்.

பொதுவாக இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் ஒரு ஆண்டு வரை வேலை செய்யலாம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பிரிவுகளில் படித்தவர்கள் மூன்று ஆண்டுகள் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அதன் பிறகு H-1B விசா கோரி விண்ணப்பிக்கும் போது இந்த அனுபவம் முக்கியமானதாக பார்க்கப்படும்.

ஒரு லட்சம் டாலர்

இந்த ஓபிடி கீழ் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தான் தனியாக 1 லட்சம் டாலர் கட்டணம் விதிப்பது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இந்த கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டுமா அல்லது வேலை வழங்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் படித்த பிறகு அங்கேயே வேலை செய்ய விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய நிதி சுமை ஏற்படும்.

இந்தியாவை சேர்ந்த பல மாணவர்கள், அமெரிக்காவில் படிக்க பல கோடி செலவழிக்கின்றனர். படிப்புக்கு பிறகு ஓபிடி வாய்ப்பு கிடைத்தால் அதில் கணிசமான தொகையை மீட்க முடிகிறது. மேலும், சர்வதேச அனுபவத்தையும் பெறுகின்றனர். ஆனால் ரூ.95 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டால்.. அமெரிக்க நிறுவனங்களே கூட வெளிநாட்டு மாணவர்களை வேலைக்கு எடுக்க தயங்கக்கூடும்.

மாணவர்களுக்கு சுமை

மாணவர்களே அந்த தொகையை செலுத்த வேண்டும் என்றால்.. அது மாணவர்களுக்கு கூடுதல் சுமை தான். ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவழிக்கும் மாணவர்களால் மீண்டும் ஒரு கோடி என்பது ஏற்க முடியாத சுமையாக மாறலாம். இதனால் இந்தியா மாணவர்கள் அமெரிக்காவில் மேற்படிப்பு படிப்பதையே கூடதவிர்க்கும் சூழலும் கூட உருவாகலாம்!

இது மட்டுமல்லாமல், மாணவர் விசா முறையிலும் டிரம்ப் நிர்வாகம் முக்கிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுவரை மாணவர்கள் முழுநேர படிப்பில் இருந்தவரை அமெரிக்காவில் தங்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதாவது மாணவர்களின் படிப்பு 5 ஆண்டுகள் என்றால் மாணவர் விசாவில் 5 ஆண்டுகள் முழுமையாக தங்கலாம். அதற்காக தனி அனுமதி எதுவும் தேவையில்லை.

ஆனால் புதிய விதிகளின்படி சர்வதேச மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி வழங்கப்படும். மருத்துவம், முனைவர் பட்டம், ஆராய்ச்சி போன்ற படிப்புகளை தொடரும் மாணவர்கள், 4 ஆண்டுகளுக்கு மேல் தங்க வேண்டும் என்றால்.. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையிடம் தனியாக அனுமதி பெற்று விசாவை நீட்டிக்க வேண்டும்.

இந்தியர்கள்

இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்தவுடன் அமல்படுத்த முடியாது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. அதற்கு ஓராண்டு வரை கூட ஆகலாம். தற்போது அமெரிக்காவில் 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே, இந்த புதிய திட்டங்கள் இந்திய மாணவர்களை நேரடியாக பாதிக்கும் என்பதால் இந்தியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+