ஜோ பிடன் வெற்றியை சூசகமாக ஒப்புக்கொண்ட டிரம்ப்... பிடிவாதத்தை தளர்த்தும் வகையில் டிவிட்..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடான வழியில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஜோ பிடனின் வெற்றியை ஏற்க மறுத்து வந்த டிரம்ப் முதல்முறையாக பிடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பிடிவாதத்தை தளர்த்தி யதார்த்த நிலையை உணரத் தொடங்கியுள்ளார் டிரம்ப்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் போலி ஊடகங்கள் சிலவற்றின் உதவியோடு பிடன் இந்த வெற்றியை பெற்றுள்ளதாகவும் சாடியிருக்கிறார். டிரம்பின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும் பிடனின் வெற்றியை அவர் ஏற்றுக்கொண்டதை இந்த பதிவு காட்டுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் இருந்தே முரண்டு பிடித்து வந்த டிரம்ப் முதல்முறையாக பொதுவெளியில் பிடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரத்தில் இன்னும் தனது இறுதியான முடிவை டிரம்ப் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் குற்றச்சாட்டு அமெரிக்க தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அடியோடு டிரம்பின் புகாரை நிராகரித்துள்ளனர்.
ஆனாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற கதையாக நடந்துகொள்கிறார் டிரம்ப். அமெரிக்க வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு இதற்கு முந்தையக் காலத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications