தேர்தலில் ஜோ பிடன் மோசடி... மீண்டும் பழைய பல்லவியை பாடும் டிரம்ப்!
வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றதாகவும், ஜோ பிடன் மோசடி செய்து அந்த வெற்றியை தன்னிடம் இருந்து பறித்து விட்டதாகவும் டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்.
ஜோ பிடன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், டிரம்ப் மீண்டும், மீண்டும் பழைய குற்றசாட்டுகளையே கூறி வருகிறார்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். வருகிற ஜனவரி ௨௦-ம் தேதி ஜோ பிடன் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவியேற்க உள்ளனர்.
ஜோ பிடன் வெற்றியை டிரம்பால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த தேர்தலில் தான் வெற்றி பெற்று விட்டதாகவும், ஜோ பிடன் மோசடி செய்து விட்டதாகவும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட பல மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றியை எதிர்த்து டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அனைத்து வழக்குகளிலும் அவர் தோல்வி அடைந்து வருகிறார். இருந்தபோதிலும் அவர் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அதே பல்லவியை பாடிய டிரம்ப், ஜோ பிடன் மோசடி செய்து வெற்றியை தன்னிடம் இருந்து பறித்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.
ஜார்ஜியாவின் வால்டோஸ்டாவில் நடந்த பேரணியில் அவர் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி தன்னிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. ஜோ பிடன் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளார். இதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது. நாம் இன்னும் இதில் வெற்றி பெறுவோம் என்றார்.இந்த பேரணியில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாஸ்க் அணியவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றவிலை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications