Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் போர் நாளுக்கு நாள் தொடரும் சூழலில், மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே போரில் தங்களுக்கு உதவ முன்வராத நேட்டோ அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். நேட்டோ அமைப்பைக் காகிதப் புலி எனச் சாடியுள்ள டிரம்ப், நேட்டோ நாடுகளைக் கோழைகள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் உச்சத்தில் இருக்கிறது. இந்த போர் இப்போது நான்காவது வாரத்தில் நுழைந்துவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும். இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் திறக்க நேட்டோ உதவ வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

Trump attacks NATO and calls them Cowards for Ignoring Hormuz Blames Allies for Oil Price Surge

நேட்டோ நாடுகள்

இருப்பினும், நேட்டோ நாடுகள் உதவிக்கு வரவில்லை. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகியவை ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாலும் எந்தவொரு நடவடிக்கைக்கும் முறையாக உறுதியளிக்கவில்லை. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் மத்திய கிழக்கு விவகாரத்தில் தலையிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

டிரம்ப் கோபம்

தான் உதவி கேட்ட பிறகும் உதவ வரவில்லை என்பதால் டிரம்ப் ஆத்திரத்தில் இருக்கிறார். இதனால் டிரம்பின் மொத்த கோபமும் இப்போது நேட்டோ பக்கம் திரும்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் உதவி வேண்டும் எனக் கேட்ட பிறகும் நேட்டோ அமைப்புகள் உதவாத நிலையில், அந்த நட்பு நாடுகளையே கோழைகள் எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு அவர்களே காரணம் என்றும் சாடினார்.

ஒரு பக்கம் முக்கிய எண்ணெய் கப்பல் வழிப்பாதையைப் பாதுகாக்க அமெரிக்காவுக்கு யாரும் உதவத் தேவையில்லை எனச் சொல்லும் டிரம்ப், மற்றொரு பக்கம் உலக நாடுகள் செயல்படத் தவறிவிட்டன எனச் சாடியுள்ளார். மேலும், அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி மட்டுமே எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

கோழைகள்

இது தொடர்பாக அவர் மேலும், "அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி. அணு ஆயுதத்தை உருவாக்கும் ஈரானுக்கு எதிரான போரில் நேட்டோ நாடுகள் சேர விரும்பவில்லை. அந்தப் போரில் குறைந்த இழப்புடன் வென்ற பிறகும், அவர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள். எண்ணெய் விலைகளுக்கு ஹார்முஸ் நீரிணை மூடியிருப்பதே காரணம். ஒரு எளிய ராணுவ நடவடிக்கை மூலம் அதைத் திறக்க உதவ அவர்கள் முன்வரவில்லை.. அவர்கள் கோழைகள், இதையும் நாங்கள் நினைவில் கொள்வோம்!" என்று எச்சரித்துள்ளார்.

தொடர் தாக்கு

எப்போது டிரம்பின் கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்ததோ அப்போது முதலே டிரம்ப் அவர்களைத் தொடர்ந்து விமர்சித்துள்ளார். எப்போது எல்லாம் நேட்டோவுக்கு உதவி தேவைப்பட்டதோ.. அப்போது எல்லாம் அமெரிக்கா உதவி இருக்கிறது.. ஆனால், அமெரிக்காவுக்குத் தேவைப்படும்போது நேட்டோ உதவ முன்வரவில்லை என சில நாட்களுக்கு முன் தான் சாடினார். மேலும், இனி நேட்டோ உதவியே அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்றும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை ஆரம்பித்தது. முதல் நாளே கமேனி கொல்லப்பட்டார். ஆனாலும், போர் முடிவுக்கு வரவில்லை. ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+