மருத்துவ நிபுணரை 'முட்டாள்' என அர்ச்சித்த டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேசம்..!
வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவ நிபுணரான அந்தோணி ஃபவுசியை முட்டாள் என வசைபாடியுள்ளார் டிரம்ப்.
அரிஜோனாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போது அவர் இந்த வார்த்தையை குறிப்பிட்டார். டிரம்பின் இந்த விமர்சனம் அமெரிக்க மருத்துவ உலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பை பொறுத்தவரை என்ன பேசுகிறோம் யாரை பேசுகிறோம் என்பதை சற்றும் சிந்திக்காமல் பேசக்கூடியவர். மனதில் தோன்றியதை பட்டவர்த்தனமாக பேசிவிடும் டிரம்ப், கொரொனா வைரஸை சாதாரண ஃப்ளு காய்ச்சல் என எள்ளி நகையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலையும், ஆலோசனையையும் கேட்டு உலகமே தலையாட்டிய நிலையில் அதிரடியாக அந்த அமைப்பை விமர்சித்து நிதியை நிறுத்திக்கொண்டார் டிரம்ப். இந்நிலையில் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ள டிரம்ப் மருத்துவ நிபுணர் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு காரணம், கொரோனா வைரஸ் அமெரிக்காவில் இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேரின் உயிர்களை பறித்துக்கொண்டதாக தொற்றுநோய் நிபுணர் அந்தோணி ஃபவுசி கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். மருத்துவரின் அந்தப் பேச்சு டிரம்பை கடுமையாக கோபம் கொள்ளச் செய்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அந்தோணி ஃபவுசியின் இந்தப் பேச்சு, கொரோனா தடுப்பு பணிகளில் தாம் சரியாக செயல்படவில்லை என்பதை போல் இருப்பதாக உணர்ந்த டிரம்ப் மருத்துவ நிபுணர் மீதான தனது கோபத்தை பொதுவெளியில் கொட்டித்தீர்த்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக தொற்றுநோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி கூறியதைக் கேட்டு கேட்டு மக்கள் அயர்வடைந்துவிட்டதாக சாடியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவின் பெரும்பாலனவர்கள் மத்தியில் மருத்துவர் அந்தோணி ஃபவுசிக்கு தனி மரியாதை இருப்பதால் அவர்கள் டிரம்ப் விமர்சனத்தை ட்விட்டரில் கண்டித்துள்ளனர்.
-
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications