காசாவில் 60 நாட்கள் போர் நிறுத்தம்? நிபந்தனைகளுக்கு ஓகே சொன்ன இஸ்ரேல்.. டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்ட நிலையில், தீர்வு எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில், காசாவில் 60 நாள் நிறுத்தம் செய்வதற்கான திட்டம் மற்றும் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக யுத்தம் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்காமல் ஓய மாட்டோம் என இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இருப்பிடத்தை இழந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.

இஸ்ரேல் சம்மதம்
இஸ்ரேல்- ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், தற்போது வரை தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில்தான், காசாவில் 60 நாள் நிறுத்தம் செய்வதற்கான திட்டம் மற்றும் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது:- காசா விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுடன் எனது பிரதிநிதிகள் நீண்ட பேச்சுவார்த்த்தையை மேற்கொண்டனர். 60 நாள் போர் நிறுத்தத்திற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி ஏற்பாடு செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.
போரை நிறுத்தினால்
ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை விட சிறந்த ஒப்பந்தம் இருக்காது. இதை ஏற்காவிட்டால் மோசமானதாகவே அமையும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஹமாஸ் இது தொடர்பாக கூறுகையில், "போரை நிறுத்தினால் தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க தயார்" என்று ஹமாஸ் அமைப்பு கூறியிருந்தது.
அதேநேரத்தில் ஹமாஸ் வசம் இருக்கும் அனைத்து ஆயுதங்களும் ஒழிக்கப்பட்டால்தான், போர் நிறுத்தம் ஏற்படும் என்று இஸ்ரேல் கூறியது. இதற்கு ஹமாஸ் மறுப்பு தெரிவித்தது. இதனால், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதில் உடன்பாடு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
56,000 பேர் கொல்லப்பட்டதாக
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்க்குள் புகுந்து அதிரடியாக தாக்கினர். 1,200 பேர் கொல்லபட்டதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகவும் பிடித்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஹமாஸ் மீது முழு அளவிலான போரை இஸ்ரேல் தொடுத்தது. இஸ்ரேலின் தாக்குதலில் 56 ஆயிரம பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலினால், காசாவில் பல லட்சக்கணக்கான மக்கள் பசியும் பட்டினியையும் எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச அமைப்புகளும் கவலை தெரிவித்து வருகின்றன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கடந்த வாரத்தில் கடுமையான மோதல் வெடித்தது. 12 நாட்கள் இருநாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செயத்திலும் முக்கிய பங்காற்றியதாக டிரம்ப் கூறியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications