சீனாவுக்காக ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்கிறேன்.. டிரம்ப் சொன்ன மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாக திறப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சீனா மிகுந்த மகிழ்ச்சியடையும் என்றும் கூறியிருக்கிறார்.

ஈரானின் துறைமுகங்களை கட்டுப்படுத்துவதாக கூறியிருந்த அமெரிக்கா, தற்போது சீனாவுக்காக நீரிணையை திறப்பதாக கூறியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

Trump

நிரந்தரமாக திறக்கப்படுகிறது

டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதன் மூலம் சீனா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தனது ட்ரூத் சமூகப் பதிவில் தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீரிணை மீண்டும் ஒருபோதும் தடுக்கப்படாது என்றார். ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என சீனா ஒப்புக்கொண்டதாகவும், எனவேதான் நீரிணையை திறப்பதாகவம் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஆயுதங்கள்

"ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாகத் திறப்பதால் சீனா மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளது. அவர்களுக்காகவும், உலகத்திற்காகவும் நான் இதைச் செய்கிறேன். இது மாதிரி மீண்டும் ஒருபோதும் நடக்காது. ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்ப மாட்டோம் என்று சீனா ஒப்புக்கொண்டது" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் பதிவிட்டிருக்கிறார்.

சீனாவின் மறுப்பு

அமெரிக்க இராணுவத் தளங்களைக் கண்டறிந்து தாக்க ஈரான், சீன உளவு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் கூறியிருந்தது. அதேபோல வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக சிஎன்என் செய்தி கூறியிருந்தது. இப்படியாக சீனா, ஈரானுக்கு பெரிய அளவில் ஆயுத உதவிகளை செய்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியிருந்தன. இதனை சீனா மறுத்துவிட்டது.

இப்படி இருக்கையில், சீனா ஆயுத உதவியை நிறுத்துவதாக வாக்களித்துள்ளதாகவும், அதற்கு பதிலாக ஹார்முஸ் நீரிணையை திறக்க தான் ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

சண்டையில் சிறந்தவர்கள்

ட்ரூத் சோஷியலில் மீடியாவில் டிரம்ப் இது குறித்து கூறுகையில், "நான் இன்னும் சில வாரங்களில் சீனா செல்கையில் அதிபர் ஜி எனக்கு ஒரு பெரிய, அன்பான அரவணைப்பை கொடுப்பார். நாங்கள் புத்திசாலித்தனமாகவும், மிகச் சிறப்பாகவும் இணைந்து செயல்படுகிறோம்! இது சண்டையை விடச் சிறந்ததல்லவா??? ஆனால் நினைவில் கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நாங்கள் சண்டையிடுவதில் மிகச் சிறந்தவர்கள் - வேறு யாரையும் விட மிகச் சிறந்தவர்கள்!!!" என்று பதிவிட்டிருக்கிறார்.

மே 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சீனா செல்லும் டிரம்ப், அங்கு ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து, சீன அதிபர் அமெரிக்காவுக்கு பதில் பயணம் மேற்கொள்வார் என்பது குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+