ஸ்பெஷலாக ஒன்னு ரெடியாகுது! சஸ்பென்ஸ் வைத்த டிரம்ப்.. என்னவாக இருக்கும்! உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்தியக் கிழக்கில் கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கிடையே மத்தியக் கிழக்கு ராஜதந்திரத்தில் ஒரு சிறப்பான முன்னேற்றம் நடந்துள்ளதாகவும் இதன் மூலம் காசா மோதல் முடிவுக்கு வரும் என்பது போலச் சொல்லி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். டிரம்பின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதாக மாறியுள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய போர் ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இதுவரை நடந்த முயற்சிகளில் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது எல்லாம் மெல்ல மாறி வருவது போலவே தெரிகிறது.

Trump Claims Real Chance for Greatness in Middle East Hints at Special Gaza Deal Breakthrough

டிரம்ப் சொன்ன கருத்து

இதற்கிடையே மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக டிரம்ப் கூறியுள்ள சில கருத்துகள் கவனம் பெற்றுள்ளது. அதாவது மத்திய கிழக்கு ராஜதந்திரத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், காசா நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசா விவகாரம் தொடர்பாக அரபு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் டிரம்ப் தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும், அவர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தரப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விரிவான திட்டத்தை அவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து டிரம்ப் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். இதன் மூலம் மோதல் விரைவில் முடிவுக்கு வரலாம் என நம்பப்படுகிறது.

முக்கியமான சூழல்

தற்போதைய பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், "மத்தியக் கிழக்கில் மகத்தான சாதனைகளைப் படைக்க நமக்கு ஒரு மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது.. அனைவரும் ஒரு சிறப்பான காரியத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். இதுபோல நடப்பது இதுவே முதல் முறை. நாங்கள் அதை நிறைவேற்றுவோம்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஆலோசனை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் போது அரபு மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர 21 அம்சத் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் அண்மையில் முன்வைத்தது. ஐ.நா.வை விட்டு வெளியேறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசா தொடர்பாக நாங்கள் ஒரு நல்ல ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். இஸ்ரேல் தவிர அனைத்து முக்கிய நாடுகளும் இதில் கலந்து கொண்டது. இது ஒரு வெற்றிகரமான சந்திப்பு. அடுத்த கட்டமாக இஸ்ரேலுடன் இது குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்" என்றார்.

பின்னணி

மத்தியக் கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பும் முயன்று வருகிறார்கள். காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அதை நிறுத்த பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. இதற்காக இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் சமீபத்தில் தான் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்து இருந்தது.

இருப்பினும், இதுபோன்ற நடவடிக்கைகளை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். இதுபோல ஒருதலைப்பட்சமாக பாலஸ்த்தீனத்தை அங்கீகரிப்பது என்பது ஹமாஸுக்கு சன்மானம் கொடுப்பதற்குச் சமம் என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக டிரம்ப் மேலும், "மோதலை ஊக்குவிக்கச் சிலர் பாலஸ்தீனிய அரசை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்க முயல்கிறார்கள். இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது" என்று அவர் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் அவரே இப்போது தனது டோனை மாற்றி இருக்கிறார். விரைவில் காசா மோதலில் நல்ல செய்தி வரும் என்பது போல அவர் கூறியுள்ளது கவனிக்க வைப்பதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+