"இனி ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் ஒரு பகுதி.." டிரம்ப் திடீர் அறிவிப்பு.. கொந்தளிக்கும் ஈரான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பிராந்தியம் என அறிவித்துள்ளார். ஹார்முஸை அமெரிக்காவின் ஒரு பகுதி எனக் குறிப்பிடும் மேப்பை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது விவாதமாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் மூடியே இருக்கும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

உலகின் முக்கியமான எரிசக்தி கடல்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றிலும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த ஹார்முஸ் தான் பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளையும் இணைக்கிறது. உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் வழியாகவே நடக்கிறது.

US Donald Trump Hormuz Iran

ஹார்முஸ்

அமெரிக்கா ஈரான் மோதல் தொடங்கியது முதலே இந்த ஹார்முஸில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நிலவி வருகிறது. இந்த ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற விவகாரம் ஏற்கனவே அமெரிக்கா ஈரான் இடையேயான மோதலில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் என்பது அமெரிக்காவின் ஒரு பகுதி என டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒரு பகுதி

ஹார்முஸை அமெரிக்க பிரதேசம் என்பதை குறிப்பிடும் வகையிலான மேப்பையும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹார்முஸ் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறி வந்த நிலையில், இந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை மூலம் ஹார்முஸை அமெரிக்கா கட்டுப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், ஹோர்முஸை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பது நல்ல யோசனை என்றும் அவர் கூறினார்.

கொந்தளிக்கும் ஈரான்

அதேநேரம் டிரம்பிற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தக கப்பல் போக்குவரத்தை உடனடியாக மீண்டும் தொடங்கும் திட்டம் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் சார்பில் பேச்சுவார்த்தையை நடத்தி வரும் முகமது பகேர் காலிபாஃப் இந்த கருத்தை கூறியிருக்கிறார். அமெரிக்கா தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்று கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக உறுதிமொழிகள் அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என்பதே ஈரானின் கருத்தாக இருக்கிறது.

அதில் குறிப்பாக அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குவது, ஈரான் மீதான எண்ணெய் தடைகளை அகற்றுவது மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துகளை விடுவிப்பது ஆகியவற்றை உடனடியாக செய்ய வேண்டும் காலிபாஃப் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவுகிறது. இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம் என்பது போல டிரம்ப் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஹார்முஸில் என்ன நடக்கிறது?

இது ஒரு பக்கம் இருக்க.. ஹோர்முஸில் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஹார்முஸ் வழியாக கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலின் என்ஜின் அறை சேதமடைந்ததுடன், ஒரு மாலுமி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாலுமிகளுக்கு ஓமன் கடலோர காவல்படை உதவி செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், ஈரான் அல்லது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதுபோன்ற தாக்குதல் மற்றும் ஹார்முஸில் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஹார்முஸில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+