டிரம்ப் கை வச்ச எதுவுமே வேலை செய்யல.. ஐநா கூட்டத்தில் சம்பவம்! இப்படியெல்லாமா நடக்கும்?
வாஷிங்டன்: ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை. மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பிரதான மேடைக்குச் செல்லும் எஸ்கலேட்டரில் ஏறியபோது அது திடீரென நின்றதாக டிரம்ப் தெரிவித்தார். இருவரும் கைப்பிடிகளை பிடித்துக்கொண்டதால் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும், தனது டெலிபிராம்ப்டர் சுமார் 15 நிமிடங்களுக்குச் செயல்படாததால், அதைப் பயன்படுத்தாமல் பேச வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒலி அமைப்பு சரியாக வேலை செய்யாததால், பலரால் தன்னுடைய பேச்சைக் கேட்க முடியவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இது அனைத்தும் அப்பட்டமான நாசவேலை என்று கூறிய டிரம்ப், தனது எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது குறித்த தனது சோஷியல் மீடியாவில், இந்த தொழில்நுட்ப சிக்கல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பலரும் ஆம், இது நாசவேலை என்றும், சிலர் இல்லை, சாதாரணக் கோளாறுகள்தான் என்றும் பதிலளித்திருந்தனர்.
டிரம்ப் தனது பேச்சு முடிந்ததும், முன்னால் அமர்ந்திருந்த மெலனியா டிரம்ப், நீங்கள் பேசிய ஒரு வார்த்தையும் கேட்கவில்லை என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். எஸ்கலேட்டர் நிறுத்தம், டெலிபிராம்ப்டர் செயலிழப்பு, மைக் பிரச்சனை போன்ற தொடர்ச்சியான சிக்கல்களை முப்பெரும் நாசவேலை என்று வர்ணித்த டிரம்ப், இதற்குப் பொறுப்பானவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த சம்பத்தில் சீக்ரெட் சர்வீஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிருப்தியை ஐ.நா. பொதுச்செயலாளருக்கு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஐநா விடுத்துள்ள அறிக்கையில், "எஸ்கலேட்டரில் பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. படிக்கட்டுகள் நகரும்போது மக்கள் அல்லது பொருட்கள் தற்செயலாக கியரில் சிக்காமல் அல்லது உள்ளே இழுக்கப்படாமல் தடுக்க தானாக நின்றுவிடும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எனவே தற்செயலாக நின்றிருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications