"இனி நான்தான் வெனிசுலாவுக்கும் அதிபர்!" டிரம்ப் திடீர் அறிவிப்பு.. உற்று பார்க்கும் உலக நாடுகள்!
வாஷிங்டன்: வெனிசுலா மீது தாக்குதலை நடத்திய அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் அதிபர் கைது செய்து நாடு கடத்தியது. இதனால் வெனிசுலாவின் எதிர்காலம் என்னவாகும் என்பதில் தெளிவில்லாத ஒரு சூழலே நிலவி வந்தது. இதற்கிடையே வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபராகத் தானே செயல்படப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. அந்நாட்டின் அதிபரான மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தும் நாடு கடத்தியது. இதனால் வெனிசுலாவில் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது. தற்காலிகமாக அதிபர் பணிகளை அந்நாட்டின் துணை அதிபர் கவனித்து வருகிறார். இருந்தாலும் அங்கு ஒரு தெளிவான சூழல் இன்னுமே ஏற்படவில்லை.

டிரம்ப்
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவின் தற்காலிக ஆக்டிங் அதிபராகத் தானே செயல்படுவேன் என தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் அறிவித்துக் கொண்டார். வெனிசுலா நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்.. அங்குள்ள எண்ணெய்யை யார் கட்டுப்படுத்துவார்கள் என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்காலிக அதிபர்
இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில் போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் டிரம்பின் படம் இருக்கிறது. அதற்குக் கீழ் "வெனிசுலாவின் தற்காலிக அதிபர், ஜனவரி 2026 வரை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும், அதில் அமெரிக்காவின் 45 மற்றும் 47வது அதிபர் டிரம்ப் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது அமெரிக்காவின் அதிபரான டிரம்ப்பே தற்காலிகமாக வெனிசுலா அதிபராகவும் இருப்பார் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்த போட்டோ இருந்தது. அதைத் தான் டிரம்ப் பகிர்ந்திருந்தார். இதுவே டிரம்பின் திட்டமா என்பது குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் இறுதியில் வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் திடீரெனத் தாக்குதல் நடத்தியது. வெனிசுலாவில் இறங்கிய அமெரிக்கப் படைகள், அங்குப் பல இடங்களில் தாக்குதல் நடத்தியது. மேலும், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சில்லியா ஃபுளோரஸும் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனர். இருவரும் இப்போது நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது வழக்கும் நடந்து வருகிறது.
வெனிசுலா அதிகார மாற்றம்
முதலில் பாதுகாப்பான, சரியான மாற்றத்தை அடையும் வரை வெனிசுலாவின் நிர்வாகத்தை அமெரிக்கா மேற்பார்வையிடும் என டிரம்ப் கூறியிருந்தார்.. மேலும், 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை அமெரிக்காவிடம் வெனிசுலா ஒப்படைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். அது சந்தை விலையில் விற்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் வருவாய் அமெரிக்க நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது..
கட்டா எண்ணெய்
இத்தனை காலமாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் வெனிசுலா கச்சா எண்ணெய்யை விற்க முடியாத சூழல் இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்கா கட்டுப்பாட்டில் வெனிசுலா வந்துவிட்டதால் பொருளாதாரத் தடைகளை படிப்படியாக நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த கச்சா எண்ணெய்யும் சர்வதேச மார்கெட்டில் வந்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் வெனிசுலா நாட்டை போலவே டிரம்ப் வரும் நாட்களில் வேறு நாடுகள் மீதும் கூட அமெரிக்கப் படைகளை இறக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக கொலம்பியா, க்யூபா, ஈரான் ஆகிய நாடுகள் இந்த லிஸ்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி!












Click it and Unblock the Notifications