ஹார்முஸ் ஜலசந்தி இனி எங்களுக்கு சொந்தம்.. விடிந்தும் விடியாததுமாய் பஞ்சாயத்தை கூட்டிய டிரம்ப்!
வாஷிங்டன்: நேற்று வரைக்கும் ஈரான் மீது பொருளாதார தடைகள், தாக்குதல் என்று இருந்த அமெரிக்கா.. இப்போது முழுமையாக ஈரானை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி இனி எங்களுக்கு சொந்தம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஈரான் சரியான நேரத்தில் எங்களுடன் ஒப்பந்தம் போட தவறிவிட்டது என்றும், அந்நாடு நிச்சயமாக அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது என்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டிரம்ப் விளக்கமளித்திருக்கிறார். என்னதான் விளக்கெண்ணெய் விளக்கம் அளித்தாலும்.. அதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.. அமெரிக்கா செய்வது அப்பட்டமான சர்வதேச சட்ட விதி மீறல் என்று ஈரான் காட்டமாக பேசியிருக்கிறது.

டிரம்ப் பேசியது என்ன?
"ஹார்முஸ் ஜலசந்தியை நான் இப்போது அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே கருதுகிறேன். ஈரானை பொறுத்தவரை.. அந்நாடு இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ.. வெளிநாடுகளிலிருந்து வாங்கவோ முடியாது" என்று கூறியுள்ளார். இது ஈரானை டென்ஷனாக்கியிருக்கிறது. இப்படி சொன்னதற்காக.. நாங்கள் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் பதிலடியை கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. நிலம், நீர், ஆகாயம் மற்றும் சைபர்வெளி என அனைத்து வழிகளிலும் எதிரியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி தெரிவித்திருக்கிறார்.
மறுபுறம் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் வரலாற்றிலேயே இல்லாத மிகக் கடுமையான நிதி தடைகளை விதிக்க வாஷிங்டன் தயாராகி வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆக.24ம் தேதி அறிவிப்பார்.


Click it and Unblock the Notifications
