Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி அமெரிக்காவில் கால் வைக்க முடியாது! 30+ நாடுகளுக்கு தடை போட்ட டிரம்ப்.. இந்தியாவுக்கு பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் மற்றொரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சுமார் 30+ நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய மொத்தமாகத் தடை விதிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்றார். அப்போது முதலே டிரம்ப் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிப்போரும் கூட இதனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறன்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புவோருக்கும் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

Donald Trump US India

டிரம்ப்

இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இது தொடர்பாக மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதித்துக் கடந்த வாரம் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், இப்போது இந்தத் தடை பட்டியலில் இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 30ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார். அதேநேரம் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்பதை அவர் அறிவிக்கவில்லை. விரைவில் அமெரிக்க அரசு இது தொடர்பான பட்டியலை வெளியிடும் எனத் தெரிகிறது.

30+ நாடுகளுக்கு தடை

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "எவ்வளவு நாடுகளுக்கு தடை என்பதை என்னால் துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால், 30+ நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்படும். அதிபர் டிரம்ப் எந்த நாடுகளுக்கு எல்லாம் தடை விதிக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். விரைவில் அவர் அது தொடர்பான முடிவை அறிவிப்பார்" என்று கூறியிருந்தார்.

என்ன நடந்தது!

முதலில் கடந்த ஜூன் 4ம் தேதி ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த 19 நாடுகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அந்தச் சம்பவத்தில் ஒரு தேசிய பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார். வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகம் மேலும் குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்த லிஸ்ட்டை 30+ நாடுகளைக் கொண்டு வரவுள்ளதாக கிறிஸ்டி நோயம் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே அமெரிக்காவில் வசித்து வரும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களின் பின்னணி குறித்து மறுஆய்வு செய்யவுள்ளதாக கிறிஸ்டி நோயம் கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்குப் பாதிப்பு?

தற்போதைய சூழலில் எந்த நாடுகளுக்குத் தடை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், இந்தியா அந்த லிஸ்டில் இருக்காது என்றே தெரிகிறது. ஐடி தொடங்கி பல்வேறு துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது. மேலும், இந்தியா அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருக்கிறது. இதனால் எடுத்தவுடன் மொத்தமாகத் தடை லிஸ்டில் இந்தியா சேர்க்கப்பட வாய்ப்புகள் குறைவு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+