உக்ரைன் மேப்பை விட்டு எறிந்த டிரம்ப்.. "புதின் உங்களை அழித்துவிடுவார்.." நேரடியாக விடுத்த எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பல ஆண்டுகளாகத் தொடரும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இது தொடர்பாக டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையேயான உரையாடல் குறித்த தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. அதாவது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கோபத்தில் திட்டிய டிரம்ப், உக்ரைன் அதிகாரிகள் எடுத்து வந்த வரைபடத்தையும் தூக்கி வீசி ஆவேசமடைந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இதனால் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி, உலகெங்கும் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

Trump Fiery Warning to Zelenskyy Putin Will Destroy You Curses Map-Throwing Rage in White House

டிரம்ப்- ஜெலன்ஸ்கி

இதற்கிடையே டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையேயான சமீபத்தில் நடந்த மீட்டிங் குறித்த தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. அதில் உக்ரைன் போர் விவகாரத்தில் ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது, போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஜெலன்ஸ்கியிடம் அதிபர் டிரம்ப், "நீங்கள் இதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதை ஏற்க மறுத்தால், புதின் உக்ரைனை அழித்துவிடுவார்" என்றும் டிரம்ப் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு குறித்த விவரத்தை ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இரு தலைவர்களும் பேசியபோது அது கடுமையான சண்டையாக மாறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் தொடர்ந்து கோபத்துடன் பேசியதாகவும், உக்ரைன் குழுவினர் முன்வைத்த வரைபடங்களை டிரம்ப் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வரைபடத்தைத் தூக்கி எறிந்து சண்டை

உக்ரைன் தரப்பு சொல்வதைக் கேட்க மறுத்த டிரம்ப், டோன்பாஸ் பகுதியை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இருப்பினும், கொஞ்ச நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப், இப்போது இருப்பது போலவே நிலைமை தொடரலாம் எனச் சொல்லியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் போரைத் தொடர்ந்து, ரஷ்யா- உக்ரைன் போரையும் முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்தச் சந்திப்பு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

ரஷ்யாவை ஊடுருவித் தாக்கும் வகையிலான நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளைத் தர வேண்டும் என உக்ரைன் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும், இந்தக் கோரிக்கையை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டாராம். மேலும், ஒரு கட்டத்தில் உக்ரைன் சமர்ப்பித்த ராணுவ வரைபடங்களைத் தூக்கி எறிந்த டிரம்ப், இதைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்விட்டதாகக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய அதிகாரிகள்

இந்த மீட்டிங் குறித்து ஐரோப்பிய அதிகாரிகளிடம் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஐரோப்பிய அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், "இது போர் இல்லை.. சிறப்பு ராணுவ நடவடிக்கை என புதின் சொல்கிறார். டிரம்பும் கூட அதை ஏற்பது போலவே பேசுகிறார். மேலும், புதின் நினைத்தால் உக்ரைனை அழித்துவிடுவார் என்றும் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறியிருக்கிறார். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" என்றார்.

டிரம்ப்- ஜெலன்ஸ்கி மீட்டிங்கில் நடந்தது தொடர்பாக வெளியான இந்தத் தகவல் தொடர்பாக அமெரிக்காவும் உக்ரைன் தரப்பும் இதுவரை எந்தவொரு விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

புதின் வைத்த டிமாண்ட்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதின் இப்போது ஒரு முன்மொழிவை வைத்துள்ளார். அதாவது உக்ரைனுக்கு சொந்தமான டோன்பாஸ் பகுதியில் சில இடங்கள் இப்போது ரஷ்யா கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்தப் பகுதிகளை உக்ரைன் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே புதின் வைக்கும் டிமாண்ட்.

முன்பு கடந்த ஆகஸ்ட்டில் டோன்பாஸ் முழுவதையும், கெர்சன் மற்றும் ஜபோரிஜியாவையும் உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என புதின் கோரியுள்ளார். இப்போது அதில் இருந்து சற்றே இறங்கி வந்துள்ள புதின், டோன்பாஸ் பகுதியில் இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை மட்டும் கேட்கிறார். இதைச் சரியான டீலாகவே டிரம்ப் கருதுகிறார். இருப்பினும், உக்ரைன் அதிகாரிகளால் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். இதனால் இழுபறி தொடர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+