ஷெபாஸ் ஷெரீப்பும், முனிரும் சிறந்தவர்களாம்! டிரம்ப் பாராட்டு மழை... கூடவே சொன்ன முக்கியமான விஷயம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனிரை மிகச் சிறந்தவர்கள் என்று பாராட்டி பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலை விரைவாக தீர்க்கும் பணியில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அதிக வரிகளை போட்டு ஒருபக்கம் நெருக்கடி கொடுத்து வரும் டிரம்ப், மற்றொரு பக்கம் பாகிஸ்தானுக்கு நெருக்கம் காட்டும் நிலையில், மீண்டும் பாகிஸ்தான் தலைவர்களை பாராட்டி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

trump-hails-munir-and-sharif-claims-he-can-easily-resolve-afghanistan-pakistan-dispute

பாகிஸ்தானை பாராட்டி வரும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானுடன் அதீத நெருக்கம் காட்டி வருகிறார். அதேவேளையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதையும் டிரம்ப் வழக்கமாக கொண்டுள்ளார். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூன்று நாட்கள் சண்டை நடைபெற்றது.

இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் செய்ய கேட்டுக்கொண்டது. இதையடுத்து இந்த சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் டிரம்போ, "இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நானே நிறுத்தினேன்" என்று கூறி வருகிறார். இந்தியா இதனை பலமுறை மறுத்தாலும் கூட, திரும்பத் திரும்ப அதே பல்லவியை டிரம்ப் பாடி வருகிறார்.

ஷெபாஸ் ஷெரீப்புடன் அதீத நெருக்கம்

இது ஒருபக்கம் இருக்க, பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அதீத நெருக்கம் காட்டி வருகிறார். பாகிஸ்தானுடன் உறவாடி, இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப் கெடுப்பதாக அவருக்கே சொந்த நாட்டிலிருந்தே எதிர்ப்புகள் எழுந்த போதிலும், இதையெல்லாம் கண்டுகொள்ளாத டிரம்ப், "இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது நான்தான்" என தொடர்ந்து கூறி வருகிறார்.

அதேபோல, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்திலும் இந்தியாவுக்கு கடும் அழுத்தம் அளித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க, டிரம்ப் மீண்டும் பாகிஸ்தான் தலைவர்களை பாராட்டி பேசியுள்ளார்.

ஷெரீப்பும், ஆசிம் முனிரும் மிகச்சிறந்தவர்கள்

மலேசியா சென்ற டிரம்ப், கோலாலம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியாவுக்கு சென்றுள்ளார். கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், ராணுவ தளபதி ஆசிம் முனிரும் மிகச்சிறந்தவர்கள்" என்று கூறினார். மேலும், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலை தீர்க்க விரைவில் உதவ இருப்பதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "பாகிஸ்தான் ஃபீல்டு மார்ஷல் (ராணுவ தளபதி) மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் மிகச்சிறந்த நபர்கள். இதை (ஆப்கானிஸ்தான் - பாக் மோதல்) விரைவில் முடித்துவிடுவேன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இது என்னால் செய்யக்கூடிய ஒன்று என்று நான் உணர்கிறேன்.

8 போர்களை நிறுத்தியுள்ளேன்

எனது நிர்வாகம் அமைந்து 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். இதற்கு முன்பு இப்படிப் பட்டது இல்லை. இனி இப்படி அமையப் போவதும் இல்லை. பல மில்லியன் உயிர்களை காப்பாற்ற என்னால் நேரம் ஒதுக்க முடிந்தால், அது ஒரு சிறந்த காரியம். இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+