பைடன் திக்கி திணறுகிறார்.. டிரம்ப் தான் விவாதத்தை ரூல் செய்கிறார்.. உற்று கவனிக்கும் அமெரிக்க மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பொதுவாகத் தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள் ஒரே மேடையில் நின்று விவாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். அதன்படி இன்று அதிபர் தேர்தல் போட்டியிடும் பைடன் மற்றும் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. அதில் பைடன் திக்கித் திணறிய நிலையில், டிரம்ப் தான் பெரும்பாலான நேரம் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அங்கு பொதுவாகவே அதிபர் தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்துவார்கள். இதுபோல ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதால் யார் பெஸ்ட் என மக்களால் எளிதாகத் தேர்ந்தெடுக்க முடிகிறது.
முதல் விவாதம்: அதன்படி பைடன், டிரம்பு இடையேயான முதல் விவாதம் இன்று காலை நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சிஎன்என தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இதற்காக பல்வேறு ரூல்ஸ்களும் வகுக்கப்பட்டது.. இரு தலைவர்களுக்கும் தனித்தனியாகப் பேச நேரம் ஒதுக்கப்பட்டது. மேலும், ஒருவர் பேசும் போது மற்றவரின் மைக் ஆப் செய்யப்பட்டது. விவாதத்தில் குறுக்கிட அனுமதி தரப்படவில்லை.
பைடன் மற்றும் டிரம்ப் இடையே நடக்கும் முதல் விவாதம் என்பதால் இதன் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக இன்று நடந்த விவாதத்தில் அனல் பறந்தது. பணவீக்கம், குடியேற்றம், கருக்கலைப்பு உரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விவாதம் நடந்தது. விவாதம் முதலில் பணவீக்கம் குறித்துத் தொடங்கியது..
முக்கியமான பாயிண்டுகள்: தனக்கு முன்பு ஆட்சியில் இருந்த டிரம்ப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து இருந்தார் என்றும் தனது ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் மருந்துகள் விலைகள் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த டிரம்ப், பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அது முறைகேடாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாக விமர்சித்தார். மேலும் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் பதிலடி கொடுத்தார்..
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்று இருவரும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். பைடனுக்கு வயதாகிவிட்டதாக விமர்சனங்கள் டிரம்ப் விமர்சித்த நிலையில், அதற்கு பைடன் பதிலடி கொடுத்துள்ளார். இத்தனை காலம் அனுபவம் பத்தவில்லை என்று விமர்சிப்பவர்கள். இப்போது வேறு வழியில்லாமல் வயதாகிவிட்டதாக விமர்சிப்பதாகச் சாடினார். ஆப்கானிஸ்தான் போர், உக்ரைன் போர், காசா போர் குறித்தும் இருவரும் முக்கியமான பாயிண்டுகளை முன்வைத்தனர்.
மாறி மாறி விமர்சனம்: இப்படி இரு தரப்பும் மாறி மாறி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவாதத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது டிரம்ப் தான் ஆதிக்கம் செலுத்தினார். மொத்தமாக விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் பகுதியில் டிரம்ப் சுமார் 23 நிமிடங்கள் பேசினார். அதேநேரம் பைடன் 18 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பைடன் பேசும் போது பல இடங்களில் திக்கித் திணறினார். அவரது பலமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவரால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை.
ரூல் செய்த டிரம்ப்: என்னப்பா இதெல்லாம் ஒரு விஷயமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், அமெரிக்காவில் அதிபராகப் பொறுப்பேற்கும் நபர் ஃபிட்டாக இருக்கிறாரா என்பதை இதையெல்லாம் வைத்துத் தான் முடிவு செய்வார்கள். எனவே, திணறுகிறாரா.. சரியாகப் பேச முடிகிறதா என்பதைக் கூட உற்றுக் கவனிப்பார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பைடன் இந்த விவாதத்தில் சற்று திணறிய நிலையில், டிரம்ப் மொத்தமாக இதை ரூல் செய்தார் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications