எல்லாத்தையும் வாய் கிழிய பேசும் டொனால்ட் டிரம்ப்.. 10 ஆண்டுகளாக வரியே செலுத்தலையாமே!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரியை செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர்களில் டொனால்ட் டிரம்ப் மட்டுமே வரி செலுத்தும் தகவல்கள் பாதுகாப்பதில் தீவிரமாக இருக்கிறது. இவர் ஒருவர் மட்டுமே வரி செலுத்துவதை பகிரங்கமாக அறிவிப்பதில்லை.
இந்த நிலையில் 10 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏய்ப்பு செய்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:

உரிம ஒப்பந்தம்
டொனால்ட் டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018-ஆம் ஆண்டு வரை பல மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தார். எனினும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை.

இழப்பு
2016, 2017-ஆம் ஆண்டுகளில் கூட்டாட்சி வருமான வரிகளில் வெறும் 750 டாலர் மட்டுமே செலுத்தியுள்ளார். டிரம்ப் தனது வணிகத்தில் பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக கூறி வருமானத்தை குறைத்து காட்டி வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு டிரம்ப் 47.4 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்தாக குறிப்பிட்டிருந்தார்.

முறையாக வரி
ஆனால் அந்த ஆண்டு குறைந்தபட்சம் அவருக்கு 434 மில்லியன் டாலர் வருமான கிடைத்ததாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிரம்ப் கூறுகையில் இது முற்றிலும் போலியான செய்தி. எனக்கு கிடைத்த வருமானத்திற்கு நான் முறையாக வரி செலுத்தி உள்ளேன். அது தணிக்கைக்குட்பட்டது.

ஹிலாரி கிளிண்டன்
நான் செலுத்தும் வரி குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றார். எனினும் அவர் எப்போது வெளியிடுவார் என தெரியவில்லை. 2016-ஆம் ஆண்டு முதல் வரி செலுத்தும் விவரங்களை அறிவிப்பதாக கூறி வருகிறாரே ஒழிய இதுவரை அவர் வெளியிட முன்வரவில்லை. இதனால்தான் 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது கூட டிரம்ப் நிச்சயம் வரி செலுத்தும் விவரங்களை வெளியிட மாட்டார் என்றும் ஏனெனில் அவர் வரியே செலுத்துவதில்லை என்றும் ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டியிருந்தார்.

வழக்கறிஞர்
வருமான வரி குறித்து நியூயார்க் டைம்ஸுக்கு டிரம்பின் வழக்கறிஞர் ஆலன் கார்டன் கூறுகையில் கடந்த பல 10 ஆண்டுகளில் டிரம்ப் பல்லாயிரக்கணக்கான டாலர்களை வரியாகவே செலுத்தியுள்ளார். 2015-இல் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ததிலிருந்து அவர் மில்லியன் கணக்கில் வரி செலுத்தியுள்ளார் என கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications