டிரம்ப் திட்டமே வேற! சீனா மட்டுமில்லை "இந்த" 2 நாடுகளுக்கும் கூடுதல் வரி! ஆனா லிஸ்டில் இந்தியா இல்லை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டிரம்ப், அதற்குத் தேவையான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் தனது வரி திட்டம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில் அவர் சீனாவை விட வேறு இரு நாடுகளுக்குத் தான் அதிக வரி விதிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். அந்த இரு நாடுகளை எவை.. டிரம்ப் அதை டார்கெட் செய்ய என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறார். இப்போது அவர் தனது அரசில் இடம்பெறவுள்ள நிர்வாகத்தினரைத் தேர்ந்தெடுத்து வருகிறார்.

america donald trump china

வரி விதிப்போம்: இந்தச் சூழலில் டிரம்ப் திடீரென தடாலடியாக சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்காவில் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்திற்குக் காரணமாக இருக்கும் மெக்சிகோ மற்றும் கனடாவில் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோசிஷயல் தளத்தில் இது தொடர்பான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா உடன் பெரியளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் கூட வரி விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

டார்கெட் அந்த 2 நாடுகள்: அவர் தனது ட்ரூத் சோசிஷல் பக்கத்தில், "ஜனவரி 20ஆம் தேதி நான் அதிபராகப் பதவியேற்ற உடனே பல எக்ஸிகியூட்டிவ் உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறேன்.. முதலில் அமெரிக்கா உடன் திறந்த எல்லையை வைத்திருக்கும் மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி வரியாக 25%ஐ விதிக்க இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல மற்றொரு ட்வீட்டில், போலியான பொருட்களைத் தடுக்க தவறியதற்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஏற்கனவே உள்ள வரியுடன் சேர்த்துக் கூடுதலாக 10 சதவீத வரியை விதிக்கப்போவதாகவும் ட்வீட் செய்து இருந்தார்.

இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்திலேயே இந்த இறக்குமதி வரி தொடர்பாக அவர் தொடர்ந்து பேசி வந்தார். பொதுவாக அமெரிக்காவில் பணியாட்களுக்கு ஊதியம் அதிகம் தர வேண்டும். இதனால் பெரும்பாலும் எந்தவொரு பொருட்களும் அங்கே உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாகச் சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்கர்களுக்குக் குறைந்த விலையில் பல பொருட்கள் கிடைக்க இது காரணமாக அமைகிறது.

அதேநேரம் இதுபோல இறக்குமதி செய்வதாலேயே அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் தான் அதிபராகத் தேர்வானால் எல்லா இறக்குமதிகளுக்கும் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார். அப்படி இறக்குமதி வரி விதித்தால் அதற்குப் பயந்து பல நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியைத் தொடங்கும் என்பது டிரம்பின் நம்பிக்கை. இதன் காரணமாகவே இறக்குமதி விதியை அவர் அறிவித்துள்ளார்.

எச்சரிக்கை: ஆனால் பொருளாதார வல்லுநர்கள் வேறு விதமாக எச்சரிக்கிறார்கள். அதாவது இறக்குமதி வரியை அதிகரிக்கும் போது இதனால் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்கிறது. இது பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர். அதாவது டிரம்ப் விதிக்கும் இறக்குமதி வரியை மறமுமாக அமெரிக்கர்களே செலுத்த வேண்டும். இதனால் பொருட்கள் எல்லாம் காஸ்ட்லியாகவே மாறும் என்றும் இதனால் டிரம்ப் இறக்குமதி வரி விதிக்கக்கூடாது என்றே கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+