ஈரான் போல மாறுகிறதா அமெரிக்கா? LGBTQ+க்கு அதிரடி தடை விதித்த டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானில்தான் கலாச்சார காவலர்கள் என்கிற ஒரு குழு இருக்கும். அது ஹிஜாப் அணியாத பெண்களை தண்டிக்கும். அதேபோல இனி அமெரிக்காவிலும் மாற்று பாலினத்தவர்களுக்கு எதிராக கலாச்சார காவல் குழுக்கள் உருவாக வாய்ப்பு இருப்பதை டிரம்பின் பேச்சு உணர்த்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அப்படி நடந்தால் ஈரான் உள்ளிட்ட மத அடிப்படைவாத நாடுகளுக்கும், ஜனநாயக நாடாக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சி ஒரு பழமைவாத கட்சி. அதிலும் டிரம் பழுத்த பழமைவாதி என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த கூற்றுகளை மெய்ப்பிக்கும் விதமாகவே அவர் செயல்பட்டு வருகிறார்.
ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் உலக அளவில் கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக மாஷா ஆமினி என்கிற பெண்ணின் மரணத்திற்கு எதிராக எல்லோரும் குரல் கொடுத்தார்கள். அப்பெண் ஹிஜாபை சரியா அணியவில்லை என்று கூறி கலாச்சார காவலர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். இதில் அவர் மரணமடைந்தார். ஈரானை பொறுத்தவரை ஹிஜாப், புர்கா போன்றவற்றை பெண்கள் கட்டாயமாக அணிய வேண்டும்.
ஆனால் அமெரிக்கா சுதந்திரமானது என்று சொல்லப்பட்டது. இந்த சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாகும் வகையில் டிரம்பின் நடவடிக்கைகள் இருக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்த டிரம்ப், தனக்கு முந்தைய அதிபர் ஒபமா LGBTQ சமூகத்தினர் குறித்து போட்டிருந்த உத்தரவை ரத்து செய்திருந்தார். அதாவது ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை டிரம்ப் பதவியேற்றவுடன் ரத்து செய்தார்.
அதேபோல பள்ளிகளில் மாற்று பாலினத்தவர்களுக்கு என தனியாக கழிப்பறைகள் இருந்தன. இந்த திட்டத்தையும் டிரம்ப் ஒழித்தார். மட்டுமல்லாது மாற்று பாலினத்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தனி கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறையையும் டிரம்ப் நீக்கினார். அமெரிக்காவில் நீதிபதிகள் என்பது அதிபரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமனமாகும். அந்த வகையில் டிரம்ப் அதிபராக இருந்தபோது நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அனைவரும் LGBTQ குறித்து பழமைவாத கருத்துக்களையே கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று அதிபராக பதவியேற்ற டிரம்ப், தனது முதல் உரையில், "அமெரிக்காவில் இனி LGBTQ கொள்கைகளின் அடிப்படையில் அல்லாமல், ஒழுக்கம் மற்றும் தகுதியின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்குவேன்" என்று கூறியிரக்கிறார்.
இதன் மூலம் அமெரிக்காவிலும் விரைவில் கலாச்சார காவலர்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications