ஈரான் உடனான போர் எப்போது முடியும்? டிரம்ப் சொன்ன விளக்கம்.. ஓஹோ இதுதான் காரணமா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் உடனான போர் எப்போது முடியும் என்று மொத்த உலகமும் காத்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் மக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த தொடங்கிய நாளிலிருந்து இப்போது வரை, கச்சா எண்ணெய் விலை எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்திருக்கிறது. எனவே இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

donald trump iran US

இது குறித்து பேசிய டிரம்ப், ஈரான் உடனான போர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க தேர்தலில் ஈரான் தங்களுக்கு சாதகமான பலவீனமான ஆட்சியை அமைக்க முயற்சிப்பதாகவும், அதன் மூலம் அவர்கள் அணு ஆயுதங்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக ஈரானின் IRGC அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, ஈரான் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் 9 எண்ணெய் டேங்கர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. "அவை முற்றிலும் அழிந்துவிட்டன. இனி வரும் நாட்களில் ஈரான் இன்னும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளும்" என்று டிரம்ப் கூறியிருந்தார். இருப்பினும் இந்த விஷயத்த ஈரான் லேசில் விடுவதாக இல்லை. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் உடனடியாக, ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்திருக்கிறது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ விமான தளம் மீது ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதானல், அங்கு அடுத்தடுத்து பல சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புகள் நடந்திருக்கின்றன. சரி இவ்வளவு செலவு செய்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறதே.. இந்த போர் எதிர்வரும் அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக அமையுமா? என்று கேட்டால்.. இல்லை என்றே பதில் வருகிறது. அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் மீதான மக்களின் மனநிலை மற்றும் ஆதரவு பெருமளவு சரிந்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

டிரம்பின் இரண்டாவது ஆடசிக்காலத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகளால் தற்போது தேர்தல் கள் அவரது ஆட்சிக்கு எதிரான ஒரு வாக்கெடுப்பாக மாறியுள்ளது. அதாவது சமீபத்திய Reuters/Ipsos மற்றும் Financial Times கருத்துக்கணிப்புகளின்படி, டிரம்பின் மக்கள் ஆதரவு மதிப்பீடு 33% முதல் 38% ஆக குறைந்திருக்கிறது. இது அவரது அரசியல் வாழக்கையிலேயே மிக குறைந்த அளவாக கருதப்படுகிறது.

வெளியில் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, சொந்த கட்சிக்குள்ளேயும் இவருக்கு ஆதரவு குறைந்து வருகிறது. டிரம்பின் தீவிர ஆதரவு தளமான 'MAGA' குடியரசுக்கட்சி வாக்காளர்களிடையே கூட, அவரது செயல்பாடுகளுக்கு இருந்த வலுவான ஆதரவு 71%லிருந்து 62% ஆக குறைந்திருக்கிறது. ஈரானுக்கு எதிரான போர் நீண்டுகொண்டே செல்வதை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 74% மக்கள், இந்த போர் தேவையற்ற பொருளாதார மற்றும் மனித இழப்புகளை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு மற்றும் கனடா உடனான வர்த்தக போர் காரணமாக அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சுமார் 57% வாக்காளர்கள் டிரம்பின் ஆட்சியில் தங்கள் நிதிநிலை மோசமடைந்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+