Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டிரம்ப் இறந்துவிட்டார்".. Trump is Death எக்ஸில் திடீரென டிரெண்டாகும் ஹேஷ்டேக்.. காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சமூக வலைதளமான எக்ஸில் திடீரென்று TRUMP IS DEAD என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதன் பின்னணியில் துணை அதிபர் ஜேடி வான்ஸ் சொன்ன வார்த்தை தான் முக்கிய காரணமாகும்.

அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். அவருக்கு தற்போது 79 வயது ஆகிறது. இதையடுத்து சீனா, இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கும் தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார்.

trump-is-dead-began-trending-on-x-and-white-house-dismiss-this-rumours

டிரம்பின் அடாவடி வரிக்கு பல நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் சமீபகாலமாக டிரம்பின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

சமீபத்தில் கூட கால்களில் வீக்கம் இருப்பதும் போட்டோக்களில் தெரியவந்தது. அதோடு அவர் வளைந்து வளைந்து நடப்பது போன்ற வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. அதேபோல் டிரம்பின் கையில் ஏற்பட்ட காயம் இருப்பதும் பேசும் பொருளானது.

கடந்த 25ம் தேதி தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்யை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரது வலது கையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதயம் அல்லது சிறுநீரக பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவருக்கு உடல்நல பிரச்சனையை எதிர்கொள்வதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் TRUMP IS DEAD என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் டிரம்ப் இறந்து விட்டதாக பலரும் நம்ப தொடங்கினர். ஆனால் டிரம்ப் குறித்த ஹேஷ்டேக்கை வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்தது. டிரம்ப் நலமாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் கூட TRUMP IS DEAD என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து சமூக வலைளதங்களில் டிரெண்டாகி வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 83.7 ஆயிரம் பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் போடப்பட்டுள்ளது. இந்த திடீர் டிரெண்டிகிற்கு முக்கிய காரணம் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறிய ஒரு வார்த்தை தான் காரணம்.

அதாவது டிரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டியில், ‛‛ அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். மீதமுள்ள பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் வகையிலும், அமெரிக்க மக்களுக்கு சிறப்பான விஷயங்களை செய்யும் அளவுக்கும் அவர் நல்ல உடல் நலனுடன் உள்ளார்.

ஏதேனும் மோசமான அசம்பாவிதம் நிகழ்ந்து, அதிபர் பொறுப்பு ஏற்கும் தேவை ஏற்பட்டால் அதற்கு தயாராக இருக்கிறேன். துணை அதிபராக கடந்த 200 நாட்கள் நான் மேற்கொண்ட பணி, அதிபர் பணிக்கான பயிற்சியை தந்துள்ளது. பெரும் துயரம் ஏற்பட்டால் நான் பெற்ற இந்த பயிற்சி எனக்கு உதவும்'' என்றார். டிரம்பின் உடல்நலம் குறித்த யூகங்கள் ஒரு காரணமாக இருந்தாலும் கூட ஜேடி வான்ஸ் அதிபராக தயாராக இருப்பதாக கூறிய வார்த்தையும் இந்த டிரெண்டிங்கிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+