Trump: கடந்த முறை போல ஆக கூடாது.. உஷாராக வந்த ஜெலன்ஸ்கி.. பாராட்டிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் சுவாரசியம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் (Trump) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேசினர். இரு தலைவர்களும் கடந்த முறை பேசும்போது வாக்கு வாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது. ஆனால், தற்போது சுமூகமான முறையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த சந்திப்பின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அணிந்து வந்து இருந்த உடையும் மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது ஏன் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கடந்த 15 ஆம் தேதி டிரம்ப் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினார்.

கோட் சூட் அணியாமல் வந்ததால்
ஆனாலும் சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில் புதினை தொடர்ந்து இன்று வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.. கடந்த பிப்ரவரி மாதத்திற்கு முன்பு ஜெலென்ஸ்கி டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஜெலென்ஸ்கி பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் இரு நாட்டு தலைவர்கள் மீண்டும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். கடந்த பிப்ரவரி மாத சந்திப்பின் போது, உக்ரைன் அதிபர் கோட் சூட் அணியாமல் வந்ததால் டிரம்ப் தனது அதிருப்தியை காட்டினார். துணை அதிபர் ஜேடி வான்சும், அவமரியாதை செய்யும் விதமாக ஜெலன்ஸ்கி நடந்து கொள்வதாக சாடியிருந்தார்.
அமெரிக்கர்களுக்கு பிடிக்கவில்லை
அதேபோல செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர் ஒருவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பார்த்து நீங்கள் ஏன் கோட் சூட் அணிந்து வரவில்லை. உங்களிடம் இல்லையா? அலுவலகத்தின் கண்ணியத்தை மதிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ளவில்லை. இது பல அமெரிக்கர்களுக்கும் பிடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீதான தாக்குதல் முடியும் வரை நான் பார்மல் கோட் சூட் அணியபோவது இல்லை என்று கூறியிருந்தார்.
காலர் வைத்த ஜாக்கெட்டில் ஜெலன்ஸ்கி
கடந்த முறை சந்திப்பின் போது ஆடை விவகாரம் ஜெலன்ஸ்கிக்கு தலைவலியை கொடுத்து இருந்த நிலையில், இந்த முறை ஜெலன்ஸ்கி ஆடை விஷயத்தில் கவனமாக வந்து இருந்தார். கோட் சூட் அணியாவிட்டாலும் பிளேசர் மாடலில் காலர் வைத்த ஜாக்கெட் அணிந்து இருந்தார். இதனைப் பார்த்ததுமே டிரம்ப், என்னால் நம்பவே முடியவில்லை. நான் ரசிக்கிறேன்.. என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, என்னிடம் இருப்பதில் இதுதான் சிறந்தது என்று சிரித்தபடியே கூறினார். இருவருக்கும் இடையேயான இந்த பரஸ்பர உரையாடல் கடந்த பிப்ரவரி மாத சந்திப்பின் போது ஏற்பட்ட வாக்குவாத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பின் போது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் டிரம்பை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது புதின் கூறிய விஷயங்கள் பற்றி ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் எடுத்து கூறினார்.
டிரம்ப் கூறியது என்ன?
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர நியாயமான காரணங்கள் உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வர புதினும் விரும்புகிறார். இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன். விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். இந்த போரால் உலக நாடுகள் தளர்ந்து போயிவிட்டன. உடனடியாக போர் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications