Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்களில்.. திடீரென மாயமான டிரம்ப் போட்டோக்கள்! கிளம்பிய புது பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஃபைல்களை நேற்று முன்தினம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருந்தது. இந்த கோப்புகளில் அதிபர் டிரம்பின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை திடீரெ டெலிட் ஆகியுள்ளன. இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அமெரிக்காவை பொறுத்தவரை குற்றவாளிகளின் பெயர், குற்றத்தின் விவரம் உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றப்படும். இதை பார்த்து, குற்றவாளியை மக்கள் அடையாளம் கண்டு விலகி இருக்கலாம் என்பதால் இப்படி செய்யப்படுகிறது. இந்நிலையில், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஃபைல்களையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

US Trump

டிரம்ப் பழக்கம்

இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு, கோப்புகள் டிச.19ம் தேதி வெளியாகின. இவர் வெறும் பாலியல் குற்றவாளி மட்டும் கிடையாது. சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் தள்ளியவர். இவருக்கு உலகம் முழுவதும் பல பணக்கார கஸ்டமர்கள் இருந்தார்கள். அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோருடன் கடந்த காலங்களில் இவருக்கு பழக்கம் இருந்திருந்தது.

சர்ச்சை புகைப்படங்கள்

இப்படி இருக்கையில் நேற்று முன்தினம் இவர் தொடர்பான ஃபைல்கள் வெளியாகின. அதில் டிரம்ப், பில் கிளிண்டன், பாப் கலைஞர் மைக்கேல் ஜாக்சன், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் டக்கர் மற்றும் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ போன்ற உலகப் புகழ்பெற்ற நபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சில புகைப்படங்களில் கிளிண்டன் இளம்பெண்களுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் காட்சிகள் இருந்தன.

டெலிட் ஆன ஃபைல்கள்

இப்படி இருக்கையில் திடீரென டிரம்பின் போட்டோக்கள் டெலிட் ஆகியுள்ளன. டிரம்ப் போட்டோ அடங்கிய 6 ஃபைல்கள் டெலிட் ஆகியுள்ளன. இந்தப் பதிவுகள் வெளியிடப்பட்ட ஒரு நாளுக்குள்ளேயே எந்தவித விளக்கமும் பொது அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காணாமல் போன கோப்புகள், வெள்ளிக்கிழமை பொது பார்வைக்கு இருந்தன. ஆனால், சனிக்கிழமை முதல் அவற்றை பார்க்க முடியவில்லை. இதில் நிர்வாணப் பெண்களை சித்தரிக்கும் ஓவியங்களின் படங்களும், ஒரு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் ஒரு இழுப்பறையில் இருந்த படங்களும் அடங்கும். இந்தக் கோப்புகள் ஏன் அகற்றப்பட்டன? அல்லது இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்பது குறித்து நீதித்துறை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

ஏன் டிரம்ப் படங்கள் முக்கியமானவை?

டெலிட் செய்யப்பட்ட ஃபைல்களில் டிரம்பின் முக்கியமான படங்கள் இருந்திருக்கின்றன. அதாவது, டிரம்ப், மெலனியா டிரம்ப், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், அவருடைய கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்ந்திருப்பதை போன்ற போட்டோ இருந்தது. தனக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்றும், ஆனால் அதெல்லாம் 2000ம் தொடக்கத்திலேய முடிந்துவிட்டது என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த ஃபைல்கள் நீக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர். "வேறு என்னவெல்லாம் மறைக்கப்படுகிறது? எங்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை" என்று கோரியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் புதிய சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+