உதவியாளரின் ட்விட்டர் அக்கவுண்ட்டை கடன் வாங்கி ட்வீட் போட்ட டிரம்ப்.. ரொம்ப கேவலம்
வாஷிங்டன்: ட்விட்டர் அக்கவுண்ட்டை கடன் வாங்கி டொனால்ட் டிரம்ப் ட்வீட் போட்ட சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகார வெறி பிடித்தால் என்னென்ன அவமானங்கள் நடைபெறும் என்பதற்கு டிரம்ப் மிகச் சிறந்த உதாரணமாவார்.
பார்த்தாலே போதும் சிரிப்பை வரவழைப்பவர் டிரம்ப். ஆரம்பத்தில் இவருக்கும் வடகொரிய அதிபர் கிம்மிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல்கள் சிரிப்பை வரவழைத்ததாக இருந்தன.
ஒரு அதிபரை இன்னொரு நாட்டு அதிபர் இத்தனை கேவலமாக பேசியதாக வரலாறே இல்லை என சொல்லலாம். அந்த வகையில் காமெடி செய்து வந்த டிரம்ப், தற்போது முழு ஆக்ஷனில் இறங்கிவிட்டார்.

வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் பெற்ற வெற்றியை ஏற்க மறுத்து நாடாளுமன்றக் கட்டடத்தில் வன்முறையை தனது ஆதரவாளர்கள் மூலம் தூண்டிவிட்டுள்ளார். இதனால் உலக தலைவர்கள் அமெரிக்காவின் நிலையை ஏளனம் செய்கிறார்கள்.

போராட்டம்
அமெரிக்காவில் வன்முறை, போராட்டங்களை ஒரு போதும் ஏற்க முடியாது என்றவர்தான் இந்த டிரம்ப். கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட போது கருப்பினர்த்தவர்கள், வெள்ளை இனத்தவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்க மாட்டேன் என முழங்கினார்.

போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
ஆனால் அன்று நியாயத்துக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என்ற டிரம்ப் இன்று தனது அதிகார வெறியால் 4 உயிர்கள் பறி போன சம்பவத்திற்கு என்ன சொல்ல போகிறார்? வன்முறை தவறு என தெரிந்தும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஒரு ட்வீட் போட்டார்.

சமூகவலைதளங்கள் முடக்கம்
இதையடுத்து டிரம்பின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டது. இதனிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜோ பிடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அப்போது தனது உதவியாளர் ஒருவரின் ட்விட்டர் கணக்கை சிறிது நேரத்திற்கு கடன் வாங்கி ட்வீட் போட்டார் டிரம்ப். இது கேவலத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications