"அந்த உதடுகள் எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.." பெண் ஊழியர் குறித்து டிரம்ப் சொன்ன கமெண்ட்.. சர்ச்சை
வாஷிங்டன்: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் குறித்து அதிபர் டிரம்ப் கூறிய சில கருத்துகள் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கரோலின் லீவிட்டை புகழ்ந்து பேசியிருந்தார். இருப்பினும், அப்போது உதடு அழகாக இருக்கும் என்பது போலக் கூறிய கருத்துகளே விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் சர்ச்சைக்குப் புகழ்பெற்றவர். அவரது பேச்சுகள் கடந்த காலங்களில் பல முறை சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. மாதம் ஒன்று அல்லது இரு முறை சர்ச்சை கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்புபவர் தான் டிரம்ப். அப்படிதான் இப்போது இன்னொரு சர்ச்சையில் டிரம்ப் சிக்கியுள்ளார்.

உதடு சர்ச்சை
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை புகழ்ந்து பேசும்போது அவர் கூறிய கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. லீவிட்டின் முகம் மற்றும் உதடுகள் அழகாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுப் பேசியது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், "கரோலின் லீவிட் ஒரு ஸ்டார் ஆகிவிட்டார் என்பதே உண்மை. அவரது முகம், அறிவான மூளை. அந்த உதடுகள், அவை அசையும் விதம். அவை ஒரு இயந்திரத் துப்பாக்கியைப் போல அது அசைகிறது. அவர் ஒரு நட்சத்திரம். அவர் உண்மையில் ஒரு சிறந்த நபர். கரோலினை விடச் சிறந்த செய்தித் தொடர்பாளர் யாருக்கும் இருந்ததில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் அருமையான ஒரு நபர்" என்று புகழ்ந்து தள்ளினார்..
பாய்ந்து வந்த நெட்டிசன்கள்
இந்த வீடியோ உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. டிரம்பின் இந்த பேச்சு மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் சிலர் கூறினர். 1990களில் அப்போதைய அதிபர் பில் கிளின்டனுக்கும், வெள்ளை மாளிகை ஊழியர் மோனிகா லெவின்ஸ்கிக்கும் இடையே உறவு இருந்தது. அது அம்பலமாகி பெரும் பேசுபொருள் ஆன நிலையில், டிரம்ப்பின் இந்த பேச்சை அத்தோடு இணைத்து நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
விளக்கம் தரவில்லை
டிரம்ப் மீது பல கடுமையான விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. டிரம்ப் இதுபோல பேசுவது முதல்முறை இல்லை என்றும் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோல பேசுவதை ஏற்க முடியாது என்றும் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. அவர் என்ன பேசினார் என்பதே அவருக்குப் புரிந்திருக்குமா என்பதே தெரியவில்லை.. அதுதான் இதில் பெரிய சங்கடம் என ஒருவர் சாடியிருந்தார்.
இதுபோல டிரம்பிற்கு எதிராக பல்வேறு காட்டமான விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. அதேநேரம் டிரம்ப் தரப்பில் இருந்து இதுவரை அவரது பேச்சுக்கு வருத்தமோ விளக்கமோ எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கரோலின் லீவிட்
27 வயதான கரோலின் லீவிட், டிரம்பின் ஐந்தாவது செய்தித் தொடர்பாளர் ஆவார். இதற்கு முன்பு 2016- 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்த போது 4 செய்தி தொடர்பாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், அவர்களை டிரம்ப் இதுபோல பாராட்டியதே இல்லை. இந்தாண்டு தொடக்கத்தில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றது முதல் டிரம்பின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் இருக்கிறார். உலக மோதல்களை நிறுத்தி அதிபர் டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என சமீபத்தில் கரோலின் லீவிட் கூறியிருந்த நிலையில், டிரம்ப் இப்போது அவரை பாராட்டியிருக்கிறார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
"மூச்சு இருந்தது.." 130 அடியில் பங்கி ஜம்பிங் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன! பகீர் தகவல் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications