அமெரிக்க பொருளாதாரமே ஆடப்போகுது.. டிரம்ப் மிக முக்கிய முடிவு.. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது அடுத்து வரும் ஆண்டுகளில் வருமான வரியைக் கணிசமாகக் குறைக்கப் போகிறேன் என அறிவித்த அவர், சீக்கிரமே வரியை மொத்தமாகவும் நீக்கிவிடுவேன் என்றும் அறிவித்துள்ளார். டிரம்ப் இதைச் செயல்படுத்தினால் அமெரிக்கர்களுக்குப் பெரியளவில் லாபமாகவே இருக்கும்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் எப்போதும் தடாலடி அறிவிப்புகளுக்குப் பெயர் போனவர். அவர் எப்போது எந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றே தெரியாது. திடீர் திடீரென பரபரப்பைக் கிளப்பும் வகையில் எதாவது பேசிவிடுவார். அப்படியொரு தடாலடியான அறிவிப்பைத் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

Donald Trump America world

டிரம்ப்

அமெரிக்காவில் வருமான வரியைக் கணிசமாகக் குறைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் வருமான வரியை மொத்தமாகவே ரத்து செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். உலக நாடுகள் மீது தான் விதித்த வரி மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வருமான வரி இழப்பை ஈடு செய்துவிடலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க ராணுவ வீரர்களுடனான ஒரு கலந்துரையாடலின் போது தான் டிரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அமெரிக்கர்களுக்கு வரி குறைப்பு செய்யும் அளவுக்குப் போதுமான நிதி ஆதாரம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வருமான வரி இல்லை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அடுத்த இரண்டு ஆண்டுகளில், வருமான வரியைக் கணிசமாகக் குறைப்போம் என்று நினைக்கிறேன். ஒருவேளை முழுமையாகவே கூட ரத்து செய்யப்படலாம். ஏனென்றால், சுங்க வரிகள் மூலம் கிடைக்கும் பணம் மிகப் பெரியதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

சுங்க வரி வருவாய் அதிகமாகக் கிடைக்கும் என்றும் இதன் மூலம் வருமான வரியைக் குறைப்பேன் என டிரம்ப் சொல்வது இது முதல்முறை இல்லை. முன்பு இந்தாண்டு தொடக்கத்தில் வரி அறிவிக்கப்பட்ட சமயத்திலும் கூட டிரம்ப் இதே கருத்துகளைத் தான் தெரிவித்தார். ஆண்டுக்கு 2 லட்சம் டாலருக்கு குறைவாகச் சம்பாதிக்கும் அமெரிக்கர்களின் வரி கணிசமாகக் குறையும் அல்லது மொத்தமாக ரத்து செய்யப்படும் என அவர் கூறியிருந்தார்.

டிரம்ப் திட்டம்

அமெரிக்காவில் இந்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவிக்கு வந்தவுடன் உலக நாடுகள் மீது வரிகளை விதித்தார். உலக நாடுகள் அமெரிக்காவிடம் அதிக வரி வசூலிப்பதாகவும் அது சரி செய்யும் வகையில் வரியை அறிவிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். உலகின் எல்லா நாடுகள் மீதும் 10% முதல் 50% வரை வரி விதிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வரி விதிக்கப்பட்டது.

அவர் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் வரிகளை அறிவித்தார். இருப்பினும், சில காரணங்களால் முதலில் சில மாதங்கள் வரி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் வரிகள் அறிவிக்கப்பட்டன. அப்போது சில எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் அமெரிக்காவில் விலைவாசி அதிகரிக்கும் என்றும் இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இருப்பினும், தற்காலிகமாக விலை ஏறினாலும் கூட வரியைத் தவிர்க்கப் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் இதனால் விலைவாசி குறையும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

பேக் அடித்த டிரம்ப்

இருப்பினும், விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. இதனால் சமீபத்தில் 200+ பொருட்களுக்கான வரிகளைக் குறைத்து டிரம்ப் திடீரென பேக் அடித்திருந்தார்.

அதேநேரம் இன்னொரு பக்கம் வரிகளும் அமெரிக்காவுக்கு லாபம் தான் என தொடர்ந்து சொல்லி வருகிறார். அமெரிக்க வரிகள் மீதான விமர்சனங்கள் தவறானவை என்ற அவர், பணக்காரர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் குறைந்தபட்சம் $2,000 டிவிடெண்ட் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், அமெரிக்கா வரி மூலம் டிரில்லியன் கணக்கான டாலர்களை வசூலிப்பதாகவும், இதனால் சீக்கிரமே தனது $37 டிரில்லியன் கடனைக் குறைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+