முன்னாடியே லாக்டவுன் செஞ்சிருந்தா இவ்வளவு பேர் செத்திருக்கமாட்டாங்க.. பாசி கருத்து! டிரம்ப் விரக்தி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: முன்னதாகவே அமெரிக்காவை ( நாட்டை) லாக்டவுன் செய்திருந்தால் கொரோனா வைரஸிலிருந்து அதிக உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி எஸ். பாசி கூறியதால், அவர் மீது விரக்தி அடைந்த அதிபர் டிரம்ப், வெளிப்படையாக அதை வெளிப்படுத்தி உள்ளார்.

Recommended Video

    ஒபாமாவின் தவறு தான் கொரோனா வைரஸ் பரவ காரணம் - டிரம்ப் குற்றச்சாட்டு

    கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 577,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 17,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 23086 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு நாளில் மட்டும் 981 பேர் இறந்துள்ளனர். இதுவே உலகில் ஒரு நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரு நாளில் மிக அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும்

    இந்நிலையில் கொரோனாவால் 23 ஆயிரம் பேர் இறந்துவிட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்திறனில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்று அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இவர் பிப்ரவரி மாதமே ஒழுங்காக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தவர்களை தடை செய்திருந்தால் கொரோனா இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.

    மார்ச் 2வது வாரம்

    மார்ச் 2வது வாரம்

    இதனிடையே கொரோனா பாதிப்பை தடுக்க பள்ளிகளை மூடுதல், பொழுதுபோக்கு தளங்களை மூடுதல், வணிக வளாகங்களை மூடுதல், மக்களை வீட்டிலேயே இருக்க வைத்தல் போன்ற லாக்டவுன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க மருத்துவர்கள் பிப்ரவரி மாதத்தின் 3 வாரத்தில் ஆலோசனை கூறிய நிலையில், இந்த ஆலோசனையை அமெரிக்க அதிபர் டிரம்பர் மார்ச் இரண்டாம் வாரத்திற்கு பிறகே நடைமுறைப்படுத்தினார்

    லாக்டவுன் தாமதம்

    லாக்டவுன் தாமதம்

    இதனால் கொரோனாவின் தாக்கமும், உயிரிழப்பும் உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இதனால் டிரம்பின் மீது பலரும் அதிருப்தியை வெளிப்படுததி வருகிறார்கள். அமெரிக்க அரசின் உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி எஸ். பாசி முன்னதாகவே அமெரிக்காவை ( நாட்டை) லாக்டவுன் செய்திருந்தால் கொரோனா வைரஸிலிருந்து அதிக உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறினார். இவரது கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோபமாக பதிவு

    கோபமாக பதிவு

    இதனால் விரக்தியும் அதிருப்தியும் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அதை வெளிப்படையாக டுவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். குடியரசுக் கட்சி டிஅன்னா லோரெய்னின் வெளியிட்ட டுவிட்டை ரிடுவிட் செய்துள்ளார். லோரெய்னின் வெளியிட்ட ட்வீட்டில், "டிரம்ப் முன்பு மருத்துவ நிபுணர்களின் பேச்சைக் கேட்டிருந்தால், அவர் அதிக உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று ஃபாசி இப்போது கூறுகிறார். ஆனால் பிப்ரவரி 29 அன்று இதே ஃபாசி மக்களுக்கு கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் கொரோனாவால் அமெரிக்காவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறிருந்தார். எனவே பாசி வெளியேற வேண்டிய நேரம் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

    சீனர்களை தடுத்தேன்

    சீனர்களை தடுத்தேன்

    டிரம்ப் இந்த டுவிட்டை ரீடுவிட் செய்துள்ளதுடன், அந்த டுவிட்டிற்கு மேல், "மன்னிக்கவும் போலி செய்தி, இவர்கள் எல்லாம் பேசுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நான் சீனாவை தடை செய்தேன். " என்று கூறினார். கொரோனா வைரஸைக் கையாள்வதில் அதிபர் சரியாக செயல்படவில்லை என்று மக்கள் கோபம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த விவாகரத்தில் சீனாவை நோக்கி அனைவரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

    சீனாவில் இருந்து வருகை

    சீனாவில் இருந்து வருகை

    டிரம்ப் "சீனாவை தடை செய்யவில்லை", ஆனால் பிப்ரவரி 2ம் தேதி முதல் அடுத்த 14 நாட்களில் சீனாவில் இருந்த அமெரிக்கரல்லாத குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களை பிப்ரவரி முதல் அமெரிக்காவிற்கு வருவதை அவர் தடுத்தார். அதேநேரம் சீனாவில் இருந்து 40,000 அமெரிக்கர்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் அவரது உத்தரவுக்கு பின்னர் அமெரிக்காவிற்கு வந்தனர். இதுவும் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவ ஒரு காரணமாக அமைந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+