இந்தியாவுக்கு 500% வரி.. அமெரிக்கா வைத்த செக்! இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. ஜெய்சங்கர் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரியை விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. எனவே, இந்தியாவுக்கும் 500% வரி விதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் இந்தியா கவலை தெரிவித்திருக்கிறது.

உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் மாற்றங்கள், இந்தியாவில் எங்கோ ஒரு கிராமத்தில் உள்ள மக்களை பாதிக்கும். இதனைத்தான் பட்டர்பிளை எபெக்ட் என்று சொல்வார்கள். அப்படியான சம்பவத்தில்தான் இந்தியா தற்போது சிக்கியுள்ளது. அதாவது, உக்ரைனில் உள்ள கனிம வளங்கள் அமெரிக்காவுக்கு தேவை. போரை நிறுத்தினால்தான் இதை எடுக்க முடியும்.

Trump trade US

ரஷ்யாவும் சரி, உக்ரைனும் சரி போரை நிறுத்தும் எண்ணத்தில் இல்லை. முதலில் உக்ரைனிடம் டிரம்ப் பேசி பார்த்தார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, உக்ரைனுக்கான ஆயுத சப்ளையை பாதியாக குறைத்திருக்கிறார். அதேபோல ரஷ்யாவிடம் பேசி பார்த்தார். இதோ நிறுத்துகிறேன், இப்போது நிறுத்துகிறேன் என்று சொல்லி ரஷ்யாவும் போரை தொடர்ந்துக்கொண்டே வருகிறது.

இதனையடுத்து ரஷ்யாவுக்கு பொருளதார தடையை அதிகரிக்க டிரம்ப் முடிவெடிடுத்துள்ளார். அதன்படி, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரை வரி விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதாவது ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனால் இந்திய பொருட்கள் அமெரிக்காவில் 500% கூடுதல் விலை வைத்து விற்கப்படும். இப்படி வரியை உயர்த்தினால் யாரும் இந்திய பொருட்களை வாங்க முன்வர மாட்டார்கள். இதன் மூலம் இந்தியா வழிக்கு வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்தியா இது குறித்த தனது கவலையை தெரிவித்திருக்கிறது. இந்த வரி மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த அந்நாட்டின் எம்பி லிண்ட்சே கிரஹாமிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்திருக்கிறது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை கூறியுள்ளார்.

"இந்தியாவின் எரிசக்தி நலன் குறித்து எம்பி லிண்ட்சே கிரஹாமிடம் எங்கள் கவலையை தெரிவித்திருக்கிறோம். இந்திய தூதர அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றனர். இதையும் மீறி அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ளவோம்" என்று கூறியுள்ளார்.

வரி விஷயத்தில் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூலை .9ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த தேதிக்குள் அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் புதிய வரியை அமெரிக்கா தூக்கிக்கொண்டு வந்திருக்கிறது.

இப்படியெல்லாம் கறார் காட்டினால் அமெரிக்காவுடன் வணிகம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவுக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இது நமக்கு இருக்கும் மற்றொரு வாய்ப்பு. எனவே அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+