Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப்பின் ஏர்போர்ஸ் விமானத்தை நெருங்கி வந்த பயணிகள் விமானம்! நடுவானில் நடந்த திக் திக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பயணித்த 'ஏர்போர்ஸ் ஒன்' என்ற விமானத்துக்கு அருகில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் அருகே பயணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடுவானில் இந்த திக் திக் சம்பவம் அரங்கேறியுள்ளது. டிரம்பின் லண்டன் பயணத்தின் போது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகில் அதிக பாதுகாப்பு வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அமெரிக்க அதிபர் உள்ளார். அமெரிக்க அதிபராக இருக்கிறவர் வெளிநாட்டிற்கு சென்றாலும் சரி, உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டாலும் சரி, ஏர்போர்ஸ் ஒன் எனப்படும் இந்த விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம். 'பறக்கும் மாளிகை' என்று சொல்லும் அளவிற்கு இந்த விமானத்தில் அதி நவீன சொகுசு வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

trump-s-air-force-one-in-near-miss-with-another-plane-en-route-to-london

டிரம்ப் விமானத்தை நெருங்கி வந்த விமானம்

இந்த நிலையில்தான் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை லண்டனுக்கு செல்லும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்துடன் நெருக்கமாக விமானம் ஒன்று பயணித்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

லண்டனுக்குச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் போயிங் 747 ஜம்போ ஜெட் விமானமும், ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் இன்க். நிறுவனத்தின் பயணிகள் விமானமும் நியூயார்க் வானில் மிக நெருக்கமாகப் பயணித்தன. போர்ட் லாடர்டேலில் இருந்து பாஸ்டன் நோக்கிச் சென்ற ஏர்பஸ் A321 ரக ஸ்பிரிட் விமானம் மற்றும் ஏர்போர்ஸ் ஒன் ஆகிய இரண்டு விமானங்களும் லாங் ஐலண்ட் பகுதியில் ஒரே உயரத்தில் பயணித்துள்ளது.

எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை

அவற்றின் பாதை நெருங்குவதை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கவனித்தார். உடனடியாக ஸ்பிரிட் விமானத்தின் விமானிகளை பாதை மாற்றும்படி எச்சரித்தார். இந்த விமானங்கள் பல மைல்கள் தூரம் விலகி இருந்ததாலும், பாதுகாப்பு வரம்புகளைத் தாண்டவில்லை என்பதாலும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆயினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

லண்டனுக்குச் சென்ற டிரம்ப், கிங் சார்ல்ஸை வின்ட்சர் கோட்டையில் சந்தித்து, பிரிட்டனில் உள்ள தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் அமெரிக்க நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை முதலீடு செய்யவுள்ள திட்டங்களைப் பற்றிப் பேசினார்.

விமானத்தில் உள்ள வசதிகள்

அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் ஏர்போர்ஸ் ஒன் விமானம் 232 அடி நீளமும், 195 அடி அகலமும் கொண்டது. இந்த விமானம் 6 மாடி கட்டிடத்தின் உயரத்துடன் ஒப்பிடும் அளவிற்கு பிரமாண்டமானது. இது மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. விமானத்தின் மொத்த பரப்பளவு 4,000 சதுர அடி ஆகும்.

விமானத்தின் உட்பகுதி 5 நட்சத்திர உணவகத்துக்கு ஈடாக இருக்கும். அதிபர் தங்குவதற்கும், அவரது அலுவல் பணிகளை பார்ப்பதற்கும் பிரத்யேக வசதி உள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு சமைக்கக்கூடிய வசதிகளுடன் சமையற்கூடமும் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+