எல்லாம் ஓகே.. டிரம்ப் வரி அறிவிப்பில் ரஷ்யா, சீனா மட்டுமே இல்லையே ஏன்! உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வரிகளை விதிக்கும் ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார். 68 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கும் டிரம்ப் இதன் கீழ் வரிகளை விதித்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ரெசிப்ரோக்கல் வரிகளை அறிவிக்கப் போவதாக முன்கூட்டியே கூறியிருந்தார். அதன்படி அவர் இப்போது புதிய வரி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவுக்கு 25% வரி விதித்துள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வரிகளை விதித்து டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Trump s Country-Wise Tariff List 2025 Why China and Russia Are Excluded

டிரம்ப் வரி

அதேநேரம் இந்த வரி அறிவிப்பு ஆகஸ்ட் 7ம் தேதி தான் நடைமுறைக்கு வருமாம். அதற்குள் வரி விகிதங்களை இறுதி செய்ய உலக நாடுகளுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் டிரம்ப் தரப்பு ஒரு வாரம் இதைத் தாமதப்படுத்தி இருப்பதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டிரம்பின் புதிய அறிவிப்புகளின்படி அமெரிக்கா வர்த்தக உபரியைக் கொண்ட நாடுகளுக்கு 10% மட்டுமே வரி இருக்கும். அதாவது, அமெரிக்கா ஏற்றுமதி செய்வதை விடக் குறைவாக இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 10% மட்டுமே வரி விதிக்கப்படும். அதேநேரம் அமெரிக்கா வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு புதிய வரி இருக்கும். அதாவது எந்த நாட்டில் இருந்து அமெரிக்கா அதிக இறக்குமதி செய்து செய்து குறைவான ஏற்றுமதி செய்கிறதோ அதற்கு இந்த வரி இருக்கும்.

யாருக்கு எவ்வளவு!

இந்த லிஸ்டில் சுமார் 40 நாடுகளுக்கு, இப்போது 15% வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்பட்டுள்ளது. லாவஸ் மற்றும் மியான்மாருக்கு 40% வரியும், சுவிட்சர்லாந்து - 39% வரியும் விதிக்கப்படுகிறது. ஈராக், செர்பியா - 35%, அல்ஜீரியா, போஸ்னியா, லிபியா, தென்னாப்பிரிக்கா - 30% வரி விதிக்கப்படுகிறது. அதேபோல இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படுகிறது.

சீனா

இந்த லிஸ்டில் சீனா மற்றும் ரஷ்யா விடுபட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.. சீனா உடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் இன்னும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. கடந்த மே மாதம் போடப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின்படி ஆகஸ்ட் 12 வரை சீனாவுக்கு டைம் இருக்கிறது. அதுவரை வர்த்தக உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மட்டுமே சீனாவுக்கு வரி அறிவிக்கப்படும்.

ரஷ்யா

அதேபோல அமெரிக்காவின் எதிரி நாடாகக் கருதப்படும் ரஷ்யாவுக்கும் வரி அறிவிக்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் டிரம்ப் முதலில் வரியை அறிவித்தபோதே அந்த லிஸ்டில் ரஷ்யாவின் பெயர் இல்லை. அப்போதே இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால் ரஷ்யா அமெரிக்கா இடையே வர்த்தகம் எதுவும் நடப்பதில்லை என்றும் இதன் காரணமாகவே ரஷ்யாவின் பெயர் இதில் இல்லை என்று வெள்ளை மாளிகை தரப்பு விளக்கமளித்திருந்தது.

டிரம்பின் இந்த வரி அறிவிப்பு சர்வதேச அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதேநேரம் வரி நீடிக்குமா இல்லை டிரம்ப் வழக்கம் போல பேக் அடிப்பாரா என்பதை சில நாட்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+