பெட்ரோல், டீசல் விலை குறையவிடாமல் தடுக்கும் டிரம்ப்! இந்தியாவுக்கு கைநழுவும் வாய்ப்பு
வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அதிரடியான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை காரணமாக இந்தியாவுக்கு வாய்ப்பு கைநழுவி இருக்கிறது.
அமெரிக்காவின் நெருக்கடியால்தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதாகவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதாவது இந்தியா ஏற்கெனவே ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. கச்சா எண்ணெய்யில் இருந்துதான் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. 2018ம் ஆண்டை பொறுத்தவரை ஈரானிலிருந்து அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால் 2019ம் ஆண்டு மே மாதத்துடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது. காரணம் அமெரிக்காவின் அச்சுறுத்தல்தான். ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இதனால்தான் இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கவில்லை. ஆனால் ஈரான் எண்ணெய்யின் தரம் வேற லெவலில் இருக்கும். நம்மூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் சுயமாக எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலையங்களை வைத்திருக்கின்றன. இதில் ஈரான் எண்ணெய்யை சுத்திகரிக்கலாம். அதற்கேற்ற வசதி இருக்கிறது.
அதாவது கச்சா எண்ணெய் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று இணிப்பு, இன்னொன்று புளிப்பு. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் இனிப்பு வகையை சேர்ந்தது. சவுதி, ஈராக் நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் புளிப்பு வகையை சேர்ந்தது. ரஷ்யாவில் கிடைக்கும் எண்ணெய் ஓரளவு புளிப்பு தன்மை கொண்டது. ஆனால் இதே ஈரானில் கிடைக்கும் எண்ணெய் மிக அதிக புளிப்பு தன்மையை கொண்டிருக்கிறது. எனவே இதை இந்திய எண்ணெய் நிறுவனங்களால் பிரித்தெடுக்க முடியும்.
இதில் இனிப்பு தன்மை கொண்ட எண்ணெய்யை சுத்திகரிப்பது எளிது. இந்திய நிறுவனங்கள் இந்த வகை எண்ணெய்களை ஈரான் எண்ணெய்யை விட எளிதாக பிரித்தெடுக்க முடியும். ஆனால் இது காஸ்ட்லி. இதுவே ஈரான் எண்ணெய் விலை குறைவு. அதே நேரம் இதை நம்மால் பிரித்தெடுக்கவும் முடியும்.
மறுபுறம் ஈரான் நமக்கு சலுகை விலையில் எண்ணெய்யை வழங்குகிறது. இந்தியாவிலிருந்து ஈரான் பக்கம்தான். எனவே எண்ணெய்யை வாங்குவதும் எளிதுதான். எல்லாவற்றையும் விட முக்கியம், ஈரானிடம் எண்ணெய் வாங்க நாம் அமெரிக்க டாலரை கொடுக்க தேவையில்லை. நம்மூர் ரூபாயை கொடுத்தாலே போதுமானது. சவுதியில் வாங்கும்போது டாலரைதான் கொடுக்கிறோம்.
இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஈரான் எண்ணெய் நமக்கு லாபமான விஷயம். ஈரானிடம் எண்ணெய் வாங்கினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும். ஆனால் டிரம்ப் குறுக்கே நின்று சொதப்புகிறார்.
சீனா இதனால் இன்னொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஈரானிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெய்யில் சுமார் 90% சீனாவுக்குதான் சென்றிருக்கிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications